1193. | வழிகெழு குண்டர்க்கு வைகைக் கரையன்று வான்கொடுத்த கலிகெழு திண்தோள் கவுணியர் தீபன், கடலுடுத்த ஒலிதரு நீர்வை யகத்தை யுறையிட்ட தொத்துதிரு மலிதரு வார்பனி யாம்,மட மாதினை வாட்டுவதே. | | 12 | 1194. | வாட்டுவர் தத்தந் துயரை;வன் கேழலின் பின்புசென்ற வேட்டுவர் கோலத்து வேதத் தலைவனை மெல்விரலால், |
புகழ்வது. மூரித் தடவரைத் தோள் - பெரிய, அகன்ற மலைபோலும் தோள்கள். மற்று, வினைமாற்று. தாமம் - மாலை. 'தாமமாய்' என ஆக்கம் வருவிக்க. அகரச் சுட்டு 'அவன் அணிந்த' எனப் பொருள் தந்தது. முரி - மாறுபாடு. புதைத்தல் - மறைத்தல் 'சேரி மாதர்' என இயையும். முறுவலித்து - தமக்குள் எள்ளி நகையாடி. 'நாம் விரும்பிப் புகழ்வது சைவ சிகாமணி தோள்களையும், தொழுவது அவனது பாதங்களையும், கூந்தலில் மணங்கமழ அணிவது அவனது நினைவாக அவனுக்கு அடையாளமாகிய தாமரை மலர்மாலையுமாக ஆய்விட்டபொழுது சேரிப் பெண்டிர் நம்மை நகைத்துப் பேசுவதற்கு என்ன கிடக்கின்றது' என்பது இதன் திரண்ட பொருள். இப்பாட்டு, தன்னைத் தூதுவிடக் கருதிய கைக்கிளைத் தலைவிக்கு, "இஃது அம்பல் அலராதற்கு ஏதுவாய்விடும்" வன்புறை கூறியது. 1193. குறிப்புரை: இப்பாட்டு, ஒருவழித் தணந்து வந்த தலைமகனைத் தோழி குறியிடத்தில் நேர்ந்து வரைவு கடாயது. 'மாதினை வாட்டுவது வார்பனியாம்' என முடிக்க. 'உன்னைப் புல்லிக் கிடத்தலால் தலைவிக்கு மிக இனிதாதற்கு உரிய பனிக் காலம், நீ தணந்தமையால் மிக இன்னாதாயிற்று' என்றபடி. இதன் பயன் தலைவன் தலைவியை வரைந் தெய்து வானாதல். 'கவுணியர் தீபன் (தனது திருவருள் வலியால்) வையகத்தை உறையிட்டது. (மூடி மறைத்தது) ஒத்து உதிரும் பனி' - என்க. 'வைகைக் கரையில்' என ஏழாவது விரிக்க. கலி - ஆரவாரம்; புகழ் ஆரவாரம். கெழு - பொருந்திய. 'உதிரும் பனி, மலிதரு பனி, வார் பனி' எனத் தனித்தனி முடிக்க. வார்தல் - ஒழுகுதல். 'சில வேளை உதிர்ந்தும், சில வேளை ஒழுகியும் விழும் பனி' என்றபடி. குறிஞ்சித் திணைக்கு முன்பனிக்காலமாகிய பெரும்பொழுது உரித்தாக ஓதப் பட்டமை நினைக.1 1194. குறிப்புரை: இதன் பொருள் வெளிப்படை.
1. தொல் - பொருள் - அகத்திணையியல்.
|