1191. | முரசம் கரைய,முன் தோரணம் நீட, முழுநிதியின் பரிசங் கொணர்வா னமைகின் றனர்பலர்; பார்த்தினிநீ அரிசங் கணைதலென் னாமுன் கருது, அரு காசனிதன் கரிசங் கணைவயல் தந்த நகரன்ன தூமொழிக்கே. | | 10 | 1192. | மொழிவது, சைவ சிகாமணி மூரித் தடவரைத்தோள் தொழுவது, மற்றவன் தூமலர்ப் பாதங்கள்; தாமங்கமழ்ந் தெழுவது, கூந்தல் பூந்தா மரையினி யாதுகொலோ! மொழிவது, சேரி முரிப்புதை மாதர் முறுவலித்தே. | | 11 |
= அருகாசனி; சமணர்களாகிய பாம்புகளுக்கு இடிபோன்றவன்; ஞானசம்பந்தர். சண்பை நகர் - சீகாழி - அமை - மூங்கில். 1191. குறிப்புரை: (இப்பாட்டு, தலைவியது நொதுமலர் வரைவு முடுக்கம் கண்டு தோழி செவிலிக்கு அறத்தொடு நின்றது.) 'அங்கு முரசு அறைய' என மாற்றி யுரைக்க. முன் - தங்கள் வருகையின் முன்னால். பரிசம், பெண்ணை மணம் கொள்ளுதற்குத் தரும் விலை. அமைகின்றனர் - இசைகின்றனர். "பலர்" என்றதனால், 'இன்னும் இருமுது குரவர் மகட் கொடை நேர்ந்திலர்' என்பது பெறப்படும். "நீ" என்பதற்கு முன் "தாயே" என்பது வருவிக்க. 'சங்கு, மணவினைச் சங்கு' என்பது தோன்றுதற்கு, "அரி சங்கு" என்றாள். அரி - திருமால். அவன் காத்தற் கடவுள் ஆதலின் அவன் சங்கு மங்கலச் சங்காம். அணைதல் - அணைக; வியங்கோள். என்னாமுன் - என்று இருமுது குரவர் கூறுதற்கு முன். அஃதாவது, மணத்திற்கு இசைவதற்கு முன் தூமொழி, தலைவி. நான்கன் உருபை ஏழன் உருபாகத் திரித்து, 'தூமொழிக்கண் நிகழ்ந்துள்ளதை கருது' என ஒரு சொல் வருவித்து முடிக்க. நிகழ்ந்துள்ளது, தலைவன் ஒருவனோடு களவிற் கூடிய கூட்டம். அணை வயல் - நீர் மடைகளை உடைய வயல். 'வயல் கரிசங்கினைத் தந்த நகர்' - என்க. 'அருகாசனிதன் நகர் அடைதற்கு அரிதாதல் போல இவள் அடைதற்கு அரியள்' என்பாள், "அருகாசனிதன் நகர் அன்ன தூமொழி" என்றாள். 1192. குறிப்புரை: தொழிற் பெயர் எழுவாய்கள் வினைகொண்டு முடியும் உருபுகளைப் பயனிலையாக ஏற்றல் இயல்பாகலின், "மொழிவது, தொழுவது" என்னும் தொழிற் பெயர்கள், "தோளை, பாதங்களை" என்னும் இரண்டன் உருபோடு முடிந்தன. இரண்டன் உருபுகள் இங்கு இறுதிக்கண் தொக்கன. எழுவது என்னும் எழுவாய், "தாமரை" என்னும் பெயர்ப் பயனிலை கொண்டு முடிந்தது. ஈற்றில் நின்ற "மொழிவது" என்னும் எழுவாய், "யாது" என்னும் வினாப் பயனிலை கொண்டு முடிந்தது. கொல், ஓ அசைகள். மொழிவது -
|