பக்கம் எண் :

831ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி

1189.புணர்ந்தநன் மேகச் சிறுநுண் துளியின் சிறகொதுக்கி
உணர்ந்தனர் போல விருந்தனை யால்உல கம்பரசும்
குணந்திகழ் ஞானசம் பந்தன் கொடிமதில் கொச்சையின்வாய்
மணந்தவர் போயின ரோ?சொல்லு, வாழி! மடக்குருகே.

8

1190.குருந்தலர் முல்லையங் கோவல ரேற்றின் கொலைமருப்பால்
அருந்திற லாகத் துழுதசெஞ் சேற்றரு காசனிதன்
பெருந்திற மாமதில் சண்பை நகரன்ன பேரமைத்தோள்
திருந்திழை ஆர்வம் . . . . . . . . . . . . முரசே.

9


என்பாள், "நம் வேணுத்தலைவனை" என்றும், "முத்து அகம் காட்டும் முறுவல் நல்லார்" என்றும் கூறினார். வாள் - ஒளி. நிகர்ந்து - நிகர்ப்ப; ஒரு படித்தாய் விளங்க. வேணுத் தலைவன், உவமத் தொகை. தலைவனை அவர்களது அகத்தில் வித்தகம் பேசி உய்த்து, தானும் போந்து இருந்து, அவர்தம் மனம் தலைவன்பால் அணைதற்குப் 'பேசுகின்ற' உள்ளவும், இல்லாதனவும் பொருந்திய பொத்தகம் எனக் கொள்க. "முத்து அகம்" என்பதில் அகம் - செப்பு. வாய் இங்ஙனம் உருவகிக்கப்பட்டது. "காட்டும்" என்றது, 'திறந்து காட்டும்' - என்றவாறு.

1189. குறிப்புரை: இப்பாட்டு, தலைவன் பிரிவால் ஆற்றாமை மிக்க தலைவி குருகோடு சொல்லி இரங்கியது இது, "காமம் மிக்க கழிபடர் கிளவி" - எனப்படும்.

'குருகே! (நீயும்) மேகச் சிறு நுண் துளியில் சிறகை உதறி, ஆற்றி யிருந்தவரைப் போல இருந்தனை. (எனினும் உனது ஆற்றாமை தெரிகின்றது.) இக்கொச்சையில் (என்னை மணந்தவரைப் போல) உன்னை மணந்தவரும் உன்னைத் தனியே விட்டுப் போயினரோ? சொல்லு' - என உரைக்க.

"மேகத் துளியில்" என்றதனால் அவர் சொல்லிச் சென்ற கார் காலம் வந்தமையைக் குறித்தாள். உணர்தல் - இங்கே, மெலியாது ஆற்றியிருத்தல். பரசுதல் - துதித்தல். குணம், பத்தி நெறிப் பண்பு. கொச்சை - சீகாழி. வாய், ஏழன் உருபு. வாழி, அசை. மடம் - இளமை. குருகு - நீர்ப் பறவைப் பொது.

1190. (இப்பாட்டின் ஈற்றடி ஏடு சிதலமாகி முழுமையாகக் கிடைக்காமையால் இதன் முழுப் பொருளை அறிதல் அரிதாகின்றது.)

இப்பாட்டு முல்லைத் திணைத் துறையை உடையதாகத் தெரிகின்றது. ஏறு தழுவள் குறிப்பு உள்ளது. அருக - அசனி