1188. | வித்தகம் பேசி,நம் வேணுத் தலைவனை வாள்நிகர்த்து முத்தகங் காட்டும் முறுவல்நல் லார்தம் மனம்அணைய, உய்த்தகம் போந்திருந் துள்ளவும் இல்லா தனவுமுறு பொத்தகம் போலும்! முதுமுலைப் பாணன் புணர்க்கின்றதே. | | 7 |
சமணர்கள். 'மயிலைக் கொன்று எடுக்காமல், அது தானாக உகுத்த தோகையைக் கொள்வர்' என்க. நீராடாமை அவர் நோன்பு ஆதலின், "கழுவா உடலம் என்றார், கழுவின - கழுவில் ஏறியிருப்பன. "கழுவா உடலம் கழுவின ஆக்கின" என்றது நயம். குருதியால் கழுவப்பட்டது என்க. இனம் விண்டு சூழ - கழுவில் ஏறினார்க்கு இனமாய் உள்ளவர்கள் கழு மரங்களைச் சூழ்ந்து நிற்க. வித்தகம் - சதுரப்பாடு உடையவன். 'வாதில் வென்றவன்' என்றபடி. 1188. குறிப்புரை: இப்பாட்டு, அகன் ஐந்திணையுள் மருதத் திணையதாய், வாயில் வேண்டிய பாணனைக் கழறித் தலைவி வாயில் மறுத்தது. 'பாணன் முது முலை புணர்க்கின்றது, (அவன் பேசுகின்ற) உள்ளவும், இல்லாதனவும் உறுபுத்தகம் போலும்' - என இயைத்து முடிக்க. உள்ள - உண்மையான சொற்கள். இல்லாதன - பொய்ம்மையான சொற்கள். உறும் பொத்தகம் - அவ் இருசொற்களும் பொதிந்துள்ள புத்தகம். தலைவி புதல்வனைப் பெற்றுள்ளாள் ஆகலின் தனது கொங்கைகளை "முதுமுலை" என்றாள். இங்ஙனம் கூறவே 'நம்மை விரும்பாமல் இளையராகிய பரத்தையரைத் தேடி அவர் சேரியில் சென்று இரவெல்லாம் தங்கிவிட்டு, இங்குத் தங்குதல் மாத்திரைக்கு விடியலில் வர விரும்புகின்ற தலைவனை நம் இல்லத்துள் விடுத்தற்கு இப்பாணன் உள்ளதும், இல்லதுமாக ஏதேதோ சொல்லிக் கதைக்கின்றான்' - எனத் தலைவி பாணனைக் கழறி வாயில் மறுத்தாளாம். "பரத்தையர் சேரியிலும் சென்று இப்படியே அவர்களிடம் பொய்யும், புனைவும் கூறி நம் தலைவனை அவர்கள் இல்லினுட் புகவிடுவதே இவனது தொழில்; அந்தத் தொழிலை நம் முன்பும் செய்ய வந்திருக்கின்றான்; ஆயினும் அது பலிக்காது" என்றற்கு, "பாணன் நம் முலை புணர்க்கின்றது, உள்ளவும், இல்லாதனவும் உறு பொத்தகம் போலும்" என்றாள். புணர்க்கின்றது - புணர்ப்பதற்குக் கூறும் சொல், பொத்தகம் - இவன் கற்ற புத்தகத்தில் உள்ள சொற்கள்; ஆகுபெயர். 'பாணன் தலைவனை முதுமுலை புணர்க்கின்ற சொல் பொத்தகம் போலும்' என்க. வேணு - மூங்கில். இது முத்துக்களைப் பிறப்பிக்கும். 'அது போல நம் தலைவன் பரத்தையரது வாய்களில் முத்துப் போலும் பற்களை வெளித்தோன்றி விளங்கச் செய்கின்றான்'
|