பக்கம் எண் :

829ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி

1186.மன்னிய மோகச் சுவையொளி யூறோசை நாற்றமென்றிப்
பன்னிய ஐந்தின் பதங்கடந் தோர்க்குந் தொடர்வரிய
பொன்னியல் பாடகம் கிங்கிணிப் பாத நிழல்புகுவோர்
துன்னிய காஅமர் சண்பையர் நாதற்குத் தொண்டர்களே.

5

1187.தொண்டினஞ் சூழச் சுரிகுழ லார்தம் மனந்தொடர,
வண்டினஞ் சூழ வருமிவன் போலும், மயிலுகுத்த
கண்டினஞ் சூழ்ந்த வளைபிரம் போர்கழு வாவுடலம்
விண்டினஞ் சூழக் கழுவின ஆக்கிய வித்தகனே.

6


உள்ளவர்' என்பது பொருள் ஆகலான் இஃது ஏகதேச உருவகம். இது 'பரசமய கோளரி' - என்றும் வரும். குடவளைகள் - குடம் போன்ற சங்குகள். தரளம் - முத்து. 'பூந்தராய்' என்பதை, "தராய்" என்றது. தலைக் குறை.

1186. குறிப்புரை: மோகம் - மயக்கம். மோக ஐந்து - மயக்கத்தைத்தரும் ஐம்புலன்கள். பதம் - அவற்றின் ஆற்றல். ஐம்புல ஆற்றலைக் கடந்தோர், 'துறவிகள். எல்லா நெறிகளிலும் துறவு நிலை உள்ளது எனினும், ஞானசம்பந்தருக்குத் தொண்டர் ஆகியவர்களே அவர் அடைந்த பேற்றினை அடைவர்' - என்பதாம். அவர் அடைந்த பேறு சிவ சாயுச்சியம் அதனை,

போதநிலை முடிந்த வழிப்
புக்கு ஒன்றி உடன் ஆனார்1

என்றதனால் உணர்க. பாதம், ஞானசம்பந்தருடையன. அவை சென்றது இறைவர் திருவடி நிழலில். பாத நிழல் புகுவோர் - அடியொற்றிச் செல்பவர். துன்னிய கா அமர் சண்பையர் நாதன் - நெருங்கிய சோலைகள் பொருந்திய சீகாழியில் உள்ள அந்தணர்கட்குத் தலைவன்; ஞானசம்பந்தர்.

1187. குறிப்புரை: இப்பாட்டு, ஞானசம்பந்தரது வீதி யுலாவைக் கண்டாள் ஒருத்தி கூறியது.

தொண்டு இனம் - அடியார் கூட்டம். இஃது அவரைச் சூழ்ந்து செல்கின்றது. அவரைக் கண்ட மகளிரது மனங்களோ அக்கூட்டத்தைப் பின் தொடர்ந்து செல்கின்றன. அவர் அணிந்துள்ள தாமரை மலரை விரும்பி வண்டுக் கூட்டமும் சூழ்கின்றது. "கண்டினம்" என்பதை, 'கண் + தினம்' - எனப் பிரித்து, 'மயில் தினம் உகுத்த கண்' என்க. 'கண்' என்பது ஆகுபெயராய் அதற்கு இடமாகி தோகையைக் குறித்ததும் தானியாகுபெயர். கண் வளை பிரம்போர் - மயில் தோகைகளை வளைத்துக் கட்டிய பிரம்பை உடைய


1. பெரிய புராணம் - ஞானசம்பந்தர் - 1, 253.