1184. | காப்பயில் காழிக் கவுணியர் தீபற்கென் காரணமா மாப்பழி வாரா வகையிருப் பேன்என்ன, மாரனென்னே! பூப்பயில் வாளிக ளஞ்சுமென் நெஞ்சரங் கப்புகுந்த; வேப்பயில் வார்சிலை கால்வளை யாநிற்கும் மீண்டிரவே. | | 3 | 1185. | இரவும் பகலும்நின் பாதத் தலரென் வழிமுழுதும் பரவும் பரிசே யருளுகண் டாயிந்தப் பாரகத்தே விரவும் பரமத கோளரி யே!குட வெள்வளைகள் தரளஞ் சொரியுங் கடல்புடை சூழ்ந்த தராய்மன்னனே. | | 4 |
ஆதலினால் இவையிரண்டும் அருமறை, ஆகமத்தே அடங்கியிடும்; இவையிரண்டும் அரனடிக்கீழ் அடங்கும்1 என்னும் சிவஞான சித்தியைக் காண்க. பதிகப் பெருவழி - பதிகமாகிய பெருவழி. வழிகாட்டும் கருவியை, "வழி" என்றது கருவியாகுபெயர். மதியத் திரு நுதல் - பிறைபோலும் அழகிய நெற்றியை உடைய மகள். "பங்கனது அருளை நாங்கள் பெற வைத்த (பெறுதற்கு வாய்ப்பு அளித்த) நிதி" என்க. நிதி, உருவகம். கதி - சென்று அடையும் இடம். அமராவதி - தேவேந்திரன் நகர். 'அதைக் காப்பவர்', என்றது, 'இந்திரன் ஆவர்' என்றபடி. 1184. குறிப்புரை: இப்பாட்டுக் கைக்கிளைத் தலைவி காதலால் ஆற்றாது கூறியது. கா பயில் - சோலைகள் மிகுந்த. கவுணியர் தீபன் - கவுணிய கோத்திரத்தவர்கட்கு ஒரு விளக்காக வந்தவர், ஞான சம்பந்தர். 'அவருக்கு, நான் இறந்துபட்டால் பெண் பழி வரும்; அது கூடாது' என்று நான் எவ்வளவோ ஆற்றி யிருந்தாலும் மாரன் வாளிகள் அஞ்சும் என் நெஞ்சு அரங்கம் புகுந்தன; மீண்டும் அவன் இந்த இரவிலே தனது வில்லை வளைக்கின்றான் - என்பதாம். "என்னே" என்பதை இறுதியிற் கூட்டி 'நான் என் செய்வேன்' என உரைக்க. மாப் பழி - பெரும் பழி; பெண் பழி என்ன - என்று நான் கருதி யிருக்க. வாளிகள் - அம்புகள். வேப் பயில் சிலை - வெப்பம் மிகுந்த வில். கால் - முனைகள். 'மீண்டும் சிலை கால் வளையாநிற்கும்? என இயைத்து முடிக்க. இரவு - இரவின்கண். 1185. குறிப்புரை: "இந்தப் பாரகத்தே" முதலாகத் தொடங்கி உரைக்க, "பாதத்து" என்பதில் அத்து, வேண்டா வழிச் சாரியை. 'பாரகத்தே விரவும்' என்க. பாத அலர், உருவகம். வழி - சந்ததி. விரவும் பரமதம் - பலவாகக் கூடுகின்ற வேற்றுச் சமயங்கள். கோளரி - சிங்கம். 'வேற்றுச் சமயங் களாகிய யானைகட்குச் சிங்கமாய்
1. சுபக்கம் - சூ.8.17.
|