| பொய்யொடு புன்மை புல்லர்க்குப் புகன்றும் மெய்யும் மானமும் மேன்மையும் ஒரீஇ தன்னைத் தேறி முன்னையோர் கொடுத்த நன்மனைக் கிழத்தி யாகிய அந்நிலைச் |
| 15 | சாவுழிச் சாஅந் தகைமையள் ஆயினும் மேவுழி மேவல் செய்யாது காவலொடு கொண்டோள் ஒருத்தி உண்டிவேட் டிருப்ப எள்ளுக் கெண்ணெய் போலத் தள்ளாது பொருளின் அளவைக்குப் போகம்விற் றுண்ணும் |
| 20 | அருளில் மடந்தையர் ஆகம் தோய்ந்தும் ஆற்றல்செல் லாது வேற்றோர் மனைவயின் கற்புடை மடந்தையர் பொற்புநனி கேட்டுப் பிழைவழி பாராது நுழைவழி நோக்கியும் நச்சி வந்த நல்கூர் மாந்தர்தம் |
| 25 | விச்சையிற் படைத்த வெவ்வேறு காட்சியின் அகமலர்ந் தீவார் போல முகமலர்ந்(து) இனிது மொழித்தாங்(கு) உதவுதல் இன்றி நாளும் நாளும் நாள்பல குறித்(து)அவர் தாளின் ஆற்றல் தவிர்த்தும் கேளிகழ்ந்து |
| 30 | இகமும் பரமும் இல்லை என்று பயமின் றொழுகிப் பட்டிமை பயிற்றி மின்னின் அனையதன் செல்வத்தை விரும்பித் தன்னையும் ஒருவ ராக உன்னும் ஏனையோர் வாழும் வாழ்க்கையும் நனைமலர்ந்து |
| 35 | யோசனை கமழும் உற்பல வாவியில் பாசடைப் பரப்பில் பால்நிற அன்னம் பார்ப்புடன் வெருவப் பகுவாய் வாளைகள் போர்த்தொழில் புரியும் பொருகா விரியும் மருதமும் சூழ்ந்த மருத வாண |
| 40 | சுருதியும் தொடராச் சுருதி நாயக பத்தருக் கெய்ப்பினில் வைப்பென உதவும் முத்தித் தாள மூவா முதல்வநின் திருவடி பிடித்து வெருவரல் விட்டு மக்களும் மனைவியும் ஒக்கலும் திருவும் |
| 45 | பொருளென நினையா(து)உன் னருளினைநினைந்து |