பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை634

இந்திரச் செல்வமும் எட்டுச் சித்தியும்
வந்துழி வந்துழி மறுத்தனர் ஒதுங்கிச்
சின்னச் சீரை துன்னல் கோவணம்
அறுதற் கீளொடு பெறுவது புனைந்து

50

சிதவல்ஓடொன் றுதவுழி எடுத்தாங்(கு)

இடுவோர் உளரெனின் நிலையில்நின் றயின்று
படுதரைப் பாயலிற் பள்ளி மேல் ஓவாத்
தகவெனும் அரிவையைத் தழீஇ மகவெனப்
பல்லுயிர் அனைத்தையும் ஒக்கப் பார்க்கும்நின்

55

செல்வக் கடவுள் தொண்டர் வாழ்வும்

பற்றிப் பார்க்கின் உற்றநா யேற்குக்
குளப்படி நீரும் அளப்பருந் தன்மைப்
பிரளய சலதியும் இருவகைப் பொருளும்
ஒப்பினும் ஒவ்வாத் துப்பிற் றாதலின்

60

நின்சீர்அடியார் தஞ்சீர் அடியார்க்(கு)

அடிமை பூண்டு நெடுநாட் பழகி
முடலை யாக்கையொடு புடைபட் டொழுகியவர்
காற்றலை ஏவலென் நாய்த்தலை ஏற்றுக்
கண்டது காணின் அல்லதொன்(று)

65

உண்டோமற்றெனக் குள்ளது பிறிதே.

7


பழிமலைந் தெய்திய ஆக்கத்தின்,சான்றோர்
கழிநல் குரவே தலை

நல்லார்கண் பட்டவறுமையின் இன்னாதே
கல்லார்கண் பட்ட திரு1

என்பன பொது மறைத் திருமொழி

“உயிர்” இரண்டும் ஆகுபெயராய் அவற்றது துன்பத்தைக் குறித்தன. வெஃகி- விரும்பி. அவி - அடப்படுவன.

அடுநர்க்குச் சுவை பல பகர்தலாலது, ‘இதை இதை இன்று சமை, இப்படி. இப்படிச் சமை’ எனக் கட்டளையிடுதல். ஆரா உண்டி - வயிறு நிறையினும் சுவை மிகுதியால் மனம் நிறையாது அளவின்றி உண்ணும் உணவு. தூராக் குழி - தூர்க்கும் பொழுது தூர்ந்து விட்டது போலத் தோன்றிப் பின் வெறிதாகி, ஒரு நாளும் தூராதகுழி; வயிறு. பரா - பாராது இதனை, “கல்வியும்” என்பதன்பின்னர்க்கூட்டுக.


1 திருக்குறள் - 657, 408.