பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை636

வெண்பா

869.

பிறிந்தேன் நரகம்; பிறவாத வண்ணம்
அறிந்தேன் அநங்கவேள் அம்பில் - செறிந்த
பொருதவட்ட வில்பிழைத்துப் போந்தேன் புராணன்
மருதவட்டம் தன்னுள்ளே வந்து.

8

கட்டறைக் கலித்துறை

870.

வந்திக்கண் டாயடி யாரைக்கண் டால்மற வாதுநெஞ்சே
சிந்திக்கண் டாயரன் செம்பொற் கழல்திரு மாமருதைச்
சந்திக்கண் டாயில்லை யாயின் நமன்தமர் தாங்கொடுபோய்
உந்திக்கண் டாய்நிர யத்துன்னை வீழ்த்தி உழக்குவரே.

9


துன்னல் - கீளோடு சேர்த்துத் தைத்தல். அறுதல் - நெய்யப்பட்ட பின் வேறு வேறாய் நீங்குதல். பெறுவது - கிடைத்த ஒன்று. சிதவல் - உடைதல். உதவுழி - கிடைக்குமிடத்தில். படுதரைப் பாயல் - எதிர்ப்பட்டநிலமாகியபாயல். தகவு - தகுதி; ஒன்றிலும் பற்றின்மை. கடவுள் - தெய்வத் தன்மை. பிரளய சலதி - ஊழிக் காலத்தில் எங்கும் பொங்கிபரக்கும் கடல், இதுவும் ஆகுபெயரால் நீரையே குறித்தது. ‘குளப்படி நீரும், சலதி நீரும் ஆகிய இருவகைப் பொருளும்’ என்க. துப்பிற்று - வலிமையுடையது. முடலை யாக்கை - பல முறுக்குக்களையுடைய உடம்பு. புடைபட்டு - பக்கத்தில் பொருந்தி. கால் தலை - பாதமாகிய இடம். ஏவல் - ஏவப்படும் பணிகள். ‘ஏற்றுச் செய்து’என ஒரு சொல் வருவிக்க ‘அவர் கண்டது நான்காணின் அல்லது, எனக்கென்று பிறிது உண்டோ’ என உரைக்க. ‘அடியவர்க்கு அடிமையாதலிற் சிறந்த செல்வம் பிறிது இல்லை’ என்பதை உணர்த்துவார், முதற்கண் அடியர் அல்லாதாரது இழிவையும், அடியாரது உயர்வையும் விரித்து ஒப்பிட்டுக் காட்டினார்.

869. குறிப்புரை: அநங்க வேள் - மன்மதன். ‘செறிந்த வில், பொருத வில் அட்டவில்’ - எனத் தனித்தனி இயைக்க பொருத - போர் செய்த. அட்ட - கொன்ற; கொன்றது போலும் துன்பத்தைச் செய்தபுராணன் - பழையோன். “புராணன் மருத வட்டம் தன்னுளேவந்து” என்பதை முதலிற் கொள்க.

870. குறிப்புரை: “கண்டாய்”நான்கும் முன்னிலை யசைகள். முதல் மூன்று அடிகளில் முதற்கண் நின்ற சீர்களில் வந்த ககர ஒற்றுக்கள் ஈற்றடியோடு எதுகை பொருந்த வேண்டி விரிக்கப்பட்டன. “நெஞ்சே”என்பதை முதலில் வைத்து, ‘அடியாரைக் கண்டால் வந்தி; அரன் செம்பொற்கழல் மறவாது சிந்தி; திருமாமருதைச் சந்தி;