பக்கம் எண் :

637திருவிடைமருதூர் மும்மணிக்கோவை

அகவற்பா

871.

உழப்பின் வாரா உறுதிகள் உளவோ
கழப்பின் வாராக் கையற வுளவோ,
அதனால்
நெஞ்சப் புனத்துவஞ்சக் கட்டையை

5

வேரற அகழ்ந்து போக்கித் தூர்வுசெய்து

அன்பென் பாத்தி கோலி முன்புற
மெய்யெனும் எருவை விரித்(து)ஆங்(கு) ஐயமில்
பத்தித் தனிவித் திட்டு நித்தலும்
ஆர்வத் தெண்ணீர் பாய்ச்சிநேர் நின்று

10

தடுக்குநர்க் கடங்கா(து) இடுக்கண் செய்யும்

பட்டி அஞ்சினுக்(கு) அஞ்சியுட் சென்று
சாந்த வேலி கோலி வாய்ந்தபின்
ஞானப் பெருமுளை நந்தாது முளைத்துக்
கருணை இளந்தளிர் காட்ட அருகாக்

15

காமக் குரோதக் களையறக் களைந்து

சேமப் படுத்துழிச் செம்மையின் ஓங்கி
மெய்ம்மயிர்ப் புளகம் முகிழ்த்திட்(டு) அம்மெனக்
கண்ணீர் அரும்பிக் கடிமலர் மலர்ந்து,
புண்ணிய

20

அஞ்செழுத் தருங்காய் தோன்றி நஞ்சுபொதி

காள கண்டமும் கண்ணொரு மூன்றும்
தோளொரு நான்கும் சுடர்முகம் ஐந்துமாய்ப்
பவளநிறம் பெற்றுத் தவளநீறு பூசி
அறுசுவை யதனினும் உறுசுவை உடைத்தாய்க்

25காணினுங் கேட்பினுக் கருதினுங் களிதரும்

இல்லையேல் நமன் தமர் உன்னைக் கொடுபோய் நிரயத்து உந்தி வீழ்த்தி உழக்குவர்’என இயைத்து உரைக்க. வந்தி - வணங்கு; சந்தி - நேர்நின்று காண். தாம், அசை. உந்தி - பின்னின்று தள்ளி. உழக்குவர் - அலைப்பர்.

871. குறிப்புரை: உழப்பு - முயற்சி. உறுதி - நன்மை. கழப்பு - நெடுநீர்மை; மடிகையறவு - துன்பம். “முயற்சி திருவினை யாக்கும்;