| சேணுயர் மருத மாணிக்கத் தீங்கனி பையப் பையப் பழுத்துக் கைவர எம்ம னோர்கள் இனிதினி தருந்திச் செம்மாந் திருப்பச் சிலர்இதின் வாராது | | 30 | மனமெனும் புனத்தை வறும்பா ழாக்கிக் காமக் காடு மூடித் தீமைசெய் ஐம்புல வேடர் ஆறலைத் தொழுக இன்பப் பேய்த்தேர் எட்டா(து) ஓடக் கல்லா உணர்வெனும் புல்வாய் அலமர | | 35 | இச்சைவித் துதிர்த்துழி யானெனப் பெயரிய நச்சு மாமரம் நனிமிக முளைத்துப் பொய்யென் கவடுகள் போக்கிச் செய்யும் பாவப் பல்தழை பரப்பிப் பூவெனக் கொடுமை அரும்பிக் கடுமை மலர்ந்து | | 40 | துன்பப் பல்காய் தூக்கிப் பின்பு மரணம் பழுத்துநரகிடை வீழ்ந்து தமக்கும் பிறர்க்கும் உதவா(து) இமைப்பிற் கழியும் இயற்கையோர் உடைத்தே. | | 10 |
முயற்றின்மை இன்மை புகுத்தி விடும்”1என்பதனை முதல் இரண்டு. அடிகளால் வலியுறுத்திக்க கூறினார்; தாம் முயற்சியால் இன்பம் எய்தியதையும், சிலர்மடிமையால் துன்பம் எய்துதலையும் நிறுவுதற்கு. இப்பாட்டு முழுவதும் ‘நன்று, தீது’ என்னும் இருவகையான் ஆகிய முற்றுருவகம் ஆதலை அறிக. அதனால் - அதனை யறிந்தமையால்,‘அகழ்தல் முதலியவற்றைச் செய்தோம்’ என்பதாம். புனம் - கொல்லை. வஞ்சர் கட்டை - பிறரை வஞ்சித்தலாகிய பெருமரம், மெய் - வாய்மை. பத்தி - இறையன்பு. ஆர்வம் - சிவானந்த வேட்கை. பட்டி அஞ்சு, கட்டுக்கு அடங்காத ஐம்புல ஆசையாகிய யானைகள். சாந்தம் - பொறுமை. ஞானம்- மெய்யுணர்வு நந்தாது - கெடாமல். கருணை - திருவருள் அருகா - பயிரின் பக்கமாய் முளைக்கின்ற காமக்குரோதங்களைக் கூறவே இனம் பற்றி உலோபம், மோகம், மதம், மாற்சரியம் ஆகிய ஏனை நான்கும் உடன்கொள்ளப்படும். சேமப் படுத்துழி - பாதுகாவல்
1. திருக்குறள் - 616.
|