பக்கம் எண் :

639திருவிடைமருதூர் மும்மணிக்கோவை

வெண்பா

872.

உடைமணியின் ஓசைக் கொதுங்கி அரவம்
படமொடுங்கப் பையவே சென்றங்(கு) - இடைமருதர்
ஐயம் புகுவ தணியிழையார் மேல்அனங்கன்
கையம் புகவேண்டிக் காண்.

11


செய்த. பொழுது செம்மையின் ஓங்கி - (பத்தியாகியமரம்) நன்றாக வளர்ந்து முகிழ்த்தல் - அரும்பெடுத்தல். அம்மென - அழகாக “அரும்பி” என்றது, ‘போதாகி’என்றபடி. கடி - மணம்; அஃது இங்குப் பக்குவத்தைக் குறித்தது. புண்ணியம் - சிவபுண்ணியம். ‘அதனைத் தருகின்ற அஞ்செழுத்து ’என்க. ‘அஞ்செழுத்துத் தானே சிவபெருமானாய்த் தோன்றி நின்றது’ என்றபடி. காள கண்டம் - கரிய மிடறு. சுவை, அவற்றையுடைய உணவைக் குறித்தது. “இனிது இனிது” என்னும் அடுக்குக் காலப்பன்மை பற்றி வந்தது. உறு - மிக்க.“மருத மாணிக்கம்” என்பது ‘சிவபிரான்’ என்னும் அளவாய் நின்றது. ‘இனி யருந்தி’ எனப் பாடம் ஓதி, ‘இப்பொழுதே அருந்தி’ என உரைத்தலும் ஆம். ‘பாழாக்கிக் கழியும் இயற்கையோர் ஆகின்றனர்; அத்தகை யோரையும் உடையது இவ்வுலகம்’ என முடிக்க. ஆறு அலைத்தல் - வழிப்பறி செய்தல். இன்பப் பேய்த்தேர் - உலக இன்பமாகிய கானல். புல்வாய் - மான். பாலை நிலத்தில் தோன்றுகின்ற கானலை நீர் என்று நினைத்து விடாய் தணியப் பருகுதற்கு ஓடி ஓடி எய்த்தல் மான்களுக்கு இயல்பு. இச்சை - ஆசை, உதிர்த்தல் - தூவுதல் “யான்” என்பதைக் கூறவே, ‘எனது’என்பதும் கொள்ளப்படும். மாமரம் - பெரிய மரம். பொய் - பொய் கூறுதல். கவடுகள் - கிளைகள், கொடுமை - வெகுளி. கடுமை - கடுஞ்சொல்லும், வன்செயலும், தூக்கி - காய்த்துத் தொங்கவிட்டு “தூக்கி, பழுத்து” என்னும்செய்தென் எச்சங்களை, ‘தூக்க, பழுத்து” எனச் செயவென் எச்சங்களாகத் திரிக்க. இறுதிக்கண், ‘இவ்வுலகம்’என ஒரு சொல் விருவித்து முடிக்க.

872. குறிப்புரை: உடை.மணி - மேகலையில் உள்ள மணிகள். அவை மகளிர் ஐயம் இட வரும்பொழுது ஒலிக்கும். அவ்வொலியை! இடியின் தோற்றமோ’என ஐயுற்றுப் பிச்சைக்குச் செல்லும் பெருமான் அணிந்துள் பாம்புகள் தம் படங்களைச் சுருக்கிக் கொள்ளும். அம்பு உக - அம்புகள் சிந்த. காண், முன்னிலை யசை,இடை மருதர் பசிக்கு உணவு வேண்டிப் பிச்சைக்குச் செல்கிலர். தாருகாவனத்து முனிவர் பத்தினியர் மையற்பட வேண்டியேபிச்சைக்குச் செல்கின்றார்’ என்பதாம்.