கட்டளைக் கலித்துறை | 873. | காணீர் கதியொன்றுங் கல்லீர் எழுத்தஞ்சும் வல்லவண்ணம் பேணீர் திருப்பணி பேசீர் அவன்புகழ் ஆசைப்பட்டுப் பூணீர் உருத்திர சாதனம் நீறெங்கும் பூசுகிலீர் வீணீர் எளிதோ மருதப் பிரான்கழல் மேவுதற்கே. | | 12 |
அகவற்பா | 874. | மேவிய புன்மயிர்த் தொகையோ அம்மயிர் பாவிய தோலின் பரப்போ தோலிடைப் புகவிட்டுப் பொதிந்த புண்ணோ புண்ணிடை ஊறும் உதிரப் புனலோ கூறுசெய்(து) | | 5 | இடையிடை நிற்கும் எலும்போ எலும்பிடை முடைகெழு மூளை விழுதோ வழுவழுத்து உள்ளிடை ஒழுகும் வழும்போ மெள்ளநின் றூரும் புழுவின் ஒழுங்கோ நீரிடை வைத்த மலத்தின் குவையோ வைத்துக் | | 10 | கட்டிய நரம்பின் கயிறோ உடம்பினுள் பிரியா தொறுக்கும் பிணியோ தெரியா(து) இன்ன தியானென் றறியேன் தெரியா ஏதினுந் தேடினன் யாதினுங் காணேன், முன்னம் | | 15 | வரைத்தனி வில்லால் புரத்தைஅழல் ஊட்டிக் |
873. குறிப்புரை: உருத்திர சாதனம் - உருத்திராக்கம். வீணீர் - பயனில்லாது திரிகின்றவர்களே. இதனை முதற்கண் வைத்து, ‘மருதப்பிரான் கழல் மேவுதற்கு உமக்கு எளிதோ! (அன்று; ஆதலால் நீவிர்) கதி என்றும் காணீர் - காணமாட்டீர்’ என்க. ‘செயற்பாலனவற்றைச் செய்கிலீர்; நீவிர் பயன் பெறுதல் எங்ஙனம்’ என்றபடி. 874. குறிப்புரை: ‘பதியியல்பைமட்டுமன்று; ஏனைப் பசு பாசங்களது இயல்பையும் உள்ளவாறு உணர்தல் திருவருள் வழியால் வரும் சிவஞானத்தாலன்றிக் கூடாது’ என்பதையும், ‘சிவஞானத்தால் அறிகின்றுழி, முன்னர்ப் பதியியல்பை உணருமாற்றானே ஏனைப் பசு பாசங்களது இயல்பும் உள்ளவாறு உணரப்படும்’ என்பதையும் இப்பாடல் இனிது விளக்குகிறது.
|