பக்கம் எண் :

641திருவிடைமருதூர் மும்மணிக்கோவை

கண்படை யாகக் காமனை ஒருநாள்
நுண்பொடி யாக நோக்கியண் டத்து
வீயா அமரர் வீயவந் தெழுந்த
தீவாய் நஞ்சைத் திருவமு தாக்கி

20

இருவர் தேடி வெருவர நிமிர்ந்து

பாலனுக் காகக் காலனைக் காய்ந்து
சந்தன சரள சண்பக வகுள
நந்தன வனத்திடை ஞாயிறு வழங்காது
நவமணி முகிழ்த்த புதுவெயில் எறிப்ப

25

எண்ணருங் கோடி இருடிகணங் கட்குப்

புண்ணியம் புரக்கும் பொன்னி சூழ்ந்த
திருவிடை மருத பொருவிடைப் பாக
மங்கை பங்க கங்கைநா யகநின்
தெய்வத் திருவருள் கைவந்து கிடைத்தலின்

30

மாயப்படலங் கீறித் தூய

ஞான நாட்டம் பெற்றபின் யானும்
நின்பெருந் தன்மையுங் கண்டேன் காண்டலும்
என்னையுங் கண்டேன் பிறரையுங் கண்டேன்
நின்னிலை அனைத்தையும் கண்டேன் என்னே

35

நின்னைக் காணா மாந்தர்

தம்மையுங் காணாத் தன்மை யோரே.

13


‘வரைத் தனி வில்லால்.... கங்கை நாயக! நின்னைக் காணா மாந்தர் தம்மையும் காணாத் தன்மையோரே; என்னை? (நான் ஞான நாட்டம் பெறுதற்கு) முன்னம், - மயிர்த் தொகையோ? தோலின் பரப்போ? புண்ணோ? உதிரப் புனலோ? எலும்போ? மூளை விழுதோ? வழும்போ? புழுவின் ஒழுங்கோ? மலத்தின் குவையோ? நரம்பின் கயிறோ? ஒறுக்கும் பிணியோ? - ‘இன்னது யான்’ என்று தெரியாது ஏதினும் தேடினேன்; யாதினும் காணேன்; (அதனால்) என்னையே (யான்) அறிந்திலேன். நின் திருவருள் கிடைத்தபொழுது (அதனால்) மாயையாகிய திரையைக் கீறி, ஞானநாட்டம் பெற்றபின் நின் பெருந் தன்மையுங் கண்டேன்; காண்டலும் என்னையுங் கண்டேன்; பிறரையும் கண்டேன்’என ஏற்குமாற்றான் இயைத்துப் பொருள் காண்க.