| 118. | கலங்கு புனற்கங்கை ஊடால லாலும் இலங்கு மதியியங்க லாலும் - நலங்கொள் பரிசுடையான் நீள்முடிமேற் பாம்பியங்க லாலும் விரிசடையாங் காணில் விசும்பு. | | 75 |
| 119. | விசும்பில் விதியுடைய விண்ணோர் பணிந்து, பசும்பொன் மணிமகுடந் தேய்ப்ப - முசிந்து, எந்தாய் தழும்பேறி யேபாவம்! பொல்லாவாம் அந்தா மரைபோல் அடி. | | 76 |
| 120. | அடிபேரிற் பாதாளம் பேரும்; அடிகள் முடிபேரின் மாமுகடு பேருங் - கடகம் |
எதிர்த் தட்டில் எத்தனைப் பொருள்களை வைப்பினும் மேல் எழாது இருந்தமை போல, கபாலம், பிரமன் தலையேயாயினும் இறைவன் கையில் இருத்தலால், எத்தனைக் கடல்களின் நீரை வார்ப்பினும் நிரம்பாதாயிற்று. பேதையர்கள் - பெண்கள். எண்ணாது - பாத்திரத்தின் பெருமையை அறியாமல். பலி - பிச்சை. ‘கலம் பலியால் நிறைந்தவா என்னோ? என்க. (நிறையவில்லை, நிறைந்து விட்டதுபோல இறைவன் அப்பாற் சென்றான்’ என்பது குறிப்பு கண் ஆர் - இடம் மிகுந்த. கலம் - பாத்திரம். இறைவனை அடைந்த பொருள்களும் அவனைப் போலவே அளப்பரிதாதல் கூறியபடி. 118. அ. சொ. பொ.: ஊடு - உள்ளே, ஆலல் - ஒலித்தல். அசைதலுமாம். பரிசு - தன்மை; இயல்பு. ‘நீள் முடிமேல் விரி சடை’ என இயைக்க. காணில் - பார்க்கும்பொழுது. ‘சடை விசும்பாம்’ என்க. ஆக்கம் உவமை குறித்து நின்றது. ‘கங்கை மழைபோலவும், பாம்பு இராகுபோலவும் தோன்றுகின்றன’ என்பதாம். இஃது ஏது உவமை யணி. 119. அ. சொ. பொ.: “எந்தாய்” என்பதை முதலிற் கொள்க. விசும்பின் - வானின்கண் உள்ள. விதி, இங்கு நல்வினை. “விண்ணோர்” என்பது ‘தேவர்’ என்னும் அளவாய் நின்றது. “மகுடத்தைத் தேய்ப்ப’ என்க. ‘மகுடத்தால் தேய்ப்ப’ என்றும் ஆம் முசிந்து. தேய்ந்து. ஏகாரம் பிற காரணங்களினின்று பிரித்தலின் பிரிநிலை. பொல்லா ஆம் - அழகில்லன ஆகின்றன. ‘நின் அடி’ என வருவித்து, ‘தேய்ப்ப முசிந்து, தழும் பேறிப் பொல்லா ஆம்’ என வினை முடிக்க. பாவம், இரக்கக் குறிப்புச் சொல். விண்ணோர் யாவரும் சிவபெருமானது திருவடிகளில் தங்கள் முடி தோய வணங்குதலைக் குறித்தவாறு. 120. அ. சொ. பொ.: ‘அடிகளது’ என உருபு விரித்து, முதலிற் கூட்டுக. அடிகள் - சுவாமிகள். இஃது உயர்வு குறித்து வரும் பன்மைச்
|