பக்கம் எண் :

661திருவிடைமருதூர் மும்மணிக்கோவை

வெண்பா

887.

இன்றிருந்து நாளை இறக்கும் தொழிலுடைய
புன்தலை யமாக்கள் புகழ்வரோ - வென்றிமழு
வாளுடையான் தெய்வ மருதுடையான் நாயேனை
ஆளுடையான் செம்பொன் அடி.

26

கட்டளைக் கலித்துறை

888.

அடியா யிரந்தொழில் ஆயின ஆயிரம் ஆயிரம்பேர்
முடியா யிரங்கண்கள் மூவா யிரம்முற்றும் நீறணிந்த


887. குறிப்புரை: ‘இன்று இருந்து, நாளை இறத்தல்’ என்பது பொதுப்பட நிலையாமையைக் குறித்தது. அஃது அனை வர்க்கும் பொதுவாயினும் அதற்கிடையே நிலையாய பயனைத் தேடிக் கொள்பவர் வல்லுநராய் உயர்த்துக் கூறப்படுவர். அப் பயனைத் தேடிக்கொள்ளாமல் இன்று இருந்து நாளை இறத்தலை மட்டுமே உடையோர் மக்களாக மதிக்கப்படார் ஆதலரின் அவர்களை,“புன்தலைய மாக்கள்” என்றார். உடம்பின் புன்மையை அதன் முதன்மை உறுப்பாகிய தலைமேல் வைத்துக் கூறினார். அனைவர் உடம்பும் புன்மை யுடையவேயாயினும் அவ்வுடம்பு பயனுடைய உடம்பாக மாறும் பொழுது அதன் புன்மையும்மாறிவிடுகின்றது. ‘பயனை எய்தாது, இருந்து இறத்தலைமட்டுமே செய்பவர்’ என்பது தோன்ற, “இன்று இருந்துநாளை இறக்கும் தொழில் உடையர்” என்றார்.

பெயர்த்தும் செத்துப்
பிறப்பதற்கே தொழிலாகி இறக்கின்றாரே1

என அப்பரும் அருளிச் செய்தார்.

நத்தம்போற் கேடும், உளதாகும்சாக்காடும்
வித்தகர்க் கல்லால் அரிது2

என்னும் திருக்குறளும் இங்கு நினைக்கத் தக்கது. வாள் - படைக்கலம். ‘மாக்கள் ஆளுடையான் அடி புகழ்வரே’ என இயைத்து முடிக்க. ‘ஆளுடையான் அடிபுகழ்வாரே உண்மை மக்களாவார்; அது செய்யாதார் மக்களே போல் தோன்றும்3 மாக்களே’ என்பதை இங்ஙனம் கூறினார்.

888. குறிப்புரை: ‘நெஞ்சே! மருதாளியைப் பற்றிக் கொண்டு, (அவனுக்கு) - அடி ஆயிரம், தொழிலாயின ஆயிரம், பேர் ஆயிரம்,


1. திருமுறை - 6.95.6.
2. திருக்குறள் - 235.
3. திருக்குறள் - 1071.