பக்கம் எண் :

663திருவிடைமருதூர் மும்மணிக்கோவை

மாசறு சிறப்பின் வானவர் ஆடும்
பூசத் தீர்த்தம் புரக்கும் பொன்னி
அயிரா வணத்துறை ஆடும் அப்ப
கயிலாய வாண கௌரி நாயக
10நின்னருள் சுரந்து பொன்னடி பணிந்து

பெரும்பதம் பிழையா வரம்பல பெற்றோர்
இமையா நெடுங்கண் உமையாள் நங்கையும்
மழைக்கவுட் கடத்துப் புழைக்கைப் பிள்ளையும்
அமரர்த் தாங்கும் குமர வேளும்

15சுரிசங் கேந்திய திருநெடு மாலும்

வான்முறை படைத்த நான்முகத் தொருவனும்
தாருகற் செற்ற வீரக் கன்னியும்
நாவின் கிழத்தியும் பூவின் மடந்தையும்
பீடுயர் தோற்றத்துக் கோடிஉருத் திரரும்

20ஆனாப் பெருந்திறல் வானோர் தலைவனும்

செயிர்தீர் நாற்கோட் டயிரா வதமும்
வாம்பரி அருக்கர் தாம்பன் னிருவரும்
சந்திரன் ஒருவனும் செந்தீக் கடவுளும்
நிருதியும் இயமனும் சுருதிகள் நான்கும்

25வருணனும் வாயுவும் இருநிதிக் கிழவனும்

எட்டு நாகமும் அட்ட வசுக்களும்
மூன்று கோடி ஆன்ற முனிவரும்
வசிட்டனும் கபிலனும் அகத்தியன் தானும்
தும்புரு நாரதர் என்றிரு திறத்தரும்

30வித்தகப் பாடல் முத்திறத் தடியரும்

திருந்திய அன்பின் பெருந்துறைப் பிள்ளையும்
அத்தகு செல்வம் அவமதித் தருளிய
சித்த மார்சிவ வாக்கிய தேவரும்
(1)வெள்ளை நீறு மெய்யிற் கண்டு

35கள்ளன் கையிற் கட்டவிழ்ப் பித்தும்

(2)ஓடும் பல்நரி ஊளைகேட் டரனைப்
பாடின என்று படாம்பல அளித்தும்
(3)குவளைப் புனலில் தவளை அரற்ற
ஈசன் தன்னை ஏத்தின என்று

40காசும் பொன்னுங் கலந்து தூவியும்