பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை664

45(4)வழிபடும் ஒருவன் மஞ்சனத் தியற்றிய
செழுவிதை எள்ளைத் தின்னக் கண்டு
பிடித்தலும் அவன்அப் பிறப்புக் கென்ன
இடித்துக் கொண்டவன் எச்சிலை நுகர்ந்தும்
(5)மருத வட்டத் தொருதனிக் கிடந்த
50  

தலையைக் கண்டு தலையுற வணங்கி
உம்மைப் போல எம்மித் தலையும்
கிடத்தல் வேண்டுமென் றடுத்தடுத் திரந்தும்
(6)கோயில் முற்றத்து மீமிசைக் கிடப்ப
வாய்த்த தென்றுநாய்க் கட்டம் எடுத்தும்

55 

(7)காம்பவிழ்த் துதிர்ந்த கனியுருக் கண்டு
வேம்புகட் கெல்லாம் விதானம் அமைத்தும்
(8)விரும்பின கொடுக்கை பரம்பரற் கென்று
புரிகுழல் தேவியைப் பரிவுடன் கொடுத்த
பெரிய அன்பின் வரகுண தேவரும்

60 

இனைய தன்மையர் எண்ணிறந் தோரே
அனையவர் நிற்க யானும் ஒருவன்
பக்தி என்பதோர் பாடும் இன்றிச்
சுத்த னாய்இன்னுந் தோன்றாக் கடையேன்,
நின்னை

65 

இறைஞ்சிலன் ஆயினும் ஏத்திலன் ஆயினும்
வருந்திலன் ஆயினும் வாழ்த்திலன் ஆயினும்
கருதி யிருப்பன் கண்டாய் பெரும
நின்னுல கனைத்தினும் நன்மை தீமை
ஆனவை நின்செய லாதலின்

 


நானே அமையும் நலமில் வழிக்கே.

28


ஈசன் எம்பெரு மான்இடைமருதினில்
பூசம்நாம் புகுதும்புன லாடவே1

என அப்பரும் அருளிச் செய்தார். புரக்கும் - தன்னிடத்தில் வைத்துக் காக்கின்ற 'பொன்னி' என்க. 'பொன்னியது துறை' என ஆறாவது விரிக்க. 'அயிராவணத் துறை' என்பது பெயர். அயிராவணம், கயிலையில் உள்ள யானை. அஃது இரண்டாயிரம் தந்தங்களை


1. திருமுறை - 5.14.1.