உடையது. இடைமருதீசர் இத்துறையில் ஆடுவது மேற்குறித்த பூச நாளில் "பெரும" என்பதை, "கௌரி நாயக" என்பதன் பின் கூட்டுக சுரந்து -சுரத்தலால். பதம் - பதவி 'வரம் பல பெற்றோர் அடி -இனைய தனமையராகிய எண்ணிலர்' என இயையும் கவுள் -கன்னம்; காது 'கண்' என்பது பாடம் அன்று. கடம் - மதநீர். புழைக் கை - தும்பிக்கை. சுரி - சங்கு - வளைந்தசங்கு. 'வானத்தை முறையாகக் சிருட்டித்த' என்க. தாருகனைச் செற்ற வீரக் கன்னி காளி. வானோர் தலைவன் - இந்திரன். அருக்கர் - சூரியர். இடையில் ஐராவதம், சூரியர், சந்திரன், சுருதி இவர் ஒழிய, இந்திரன் முதல் இருநிதிக் கிழவன் (குபேரன்) ஈறாகச் சொல்லப்பட்ட எழுவரும் திக்குப்பாலகர்கள். ஈசானன் உருத்திரர் வகையைச் சேர்ந்தவன் ஆதலின், மேல், "கோடி உருத்திரர்" எனப்பட்டோருள் அடங்கினான். முனிவர், மகலோக வாசிகள். வசிட்டன் முதலிய மூவரும் மண்ணுலக முனிவர்கள், தும்புரு, நாரதன் இருவரும் சிவபெருமான் அருகிலிருந்து வீணையிசைக்கும் பேறு பெற்றவர். "தும்புருநாரதர்" என்பது உம்மைத் தொகை. 'உமையவள் முதலாக, தும்புரு நாரதர் ஈறாகச் சொல்லப்பட்டோர் யாவரும் அடைந்த பெருமைகள்யாவும் சிவபெருமானை வழிபட்டுப்பெற்றனவே என்றபடி. இவ்வாற்றால், 'சிவபெருமான் அனைவராலும் வழிபடப்படுபவனே யன்றித் தான் ஒருவரையும் வழிபடுதல் இல்லாதவன்' என்பதும் இனிது விளக்கப்பட்டது. இவை அனைத்தும் ஆகமப்பிரமாணத்தால் பெறப்பட்டன. இனி நாட்டு வரலாறாகிய காட்சிப் பிரமாணத்தால் பெறப்பட்டோரையும் கூறுகின்றார். "வித்தகப் பாடல்" என்றது தேவாரத் திருப்பதிகங்களை. வித்தகம் - திறல். அதுகல்லை மிதப்பித்தலும், எலும்பைப் பெண்ணாக்குதலும், முதலை யுண்ட பாலனை மீட்டலும் போன்றன. பிள்ளை - ஞான புத்திரன். சிவபெருமானே குருவாகிவந்து உபதேசிக்கப் பெற்றவர். இங்ஙனம் ஓரொரு சொல்லாலே சமயாசாரியர்களது வரலாறுகளைச் சுருங்கக் கூறினார். "அத்தகு" என்பது பண்டறிசுட்டு. அத்தகு செல்வம் - உலகர் பலரும் விரும்பும் பொருட் செல்வம். அதனை அவமதித்தமை கூறவே, அருட்செல்வத்தை மதித்தமை பெறப்பட்டது. சிவவாக்கியர் பதினெண் சித்தருள் தலையாயவராகச் சொல்லப்படுபவர். இவருக்குப்பின் இங்குச் சொல்லபடுகின்ற வரகுணதேவர் பண்டை வரகுணபாண்டியன். இவனே மேல் "பெருந்துறைப்பிள்ளை" - எனக் குறிக்கப்பட்ட மாணிக்கவாசகரைத் தனக்கு அமைச்சராகக் கொண்டிருந்தவன். இவனும், மாணிக்கவாசகரும் காலத்தால் மூவர்முதலிகளுக்கு முற்பட்டவராயினும், திருமுறைகள் வகுக்கப்பட்ட காலத்தில் திருப்பதிகங்களையே முதற்கண் கண்டெடுத்து வகுத்துப் பின்பு ஒருசமையத்தில் பிற திருமுறைகள் வகுக்கப்பட்டமையால் மாணிக்க வாசகர் மூவருக்குப்பின் நான்காமவராக எண்ணப்பட்டு
|