பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை666

வரும் முறை பற்றி இவர்களை மூவருக்குப் பின்னர்க் கூறினார். அங்ஙனம் கூறுகின்றவர் வரகுணன் அரசன்ஆகலின் சித்தராகிய சிவவாக்கியரை அவனுக்கு முன்வைத்துக் கூறினார். 'இவ்வரகுணன் பத்திப் பெருக்கால் பித்துக் கொண்டவர் செயல்போலச் சிலவற்றைச் செய்தான்' என்பது செவி வழிச்செய்தி. இவனது பத்தி மிகுதி விளங்குதற் பொருட்டுஅச் செய்திகளை இவ்வாசிரியர் தம் பாடலிற்பொறித்தார். அவை வருமாறு:

(1) உண்மையாகவே களவு செய்தஒருவனைக் காவலர் கண்டு பிடித்துக் கையில் விலங்குபூட்டிக் கொணர்ந்த பொழுது அரசனது பத்தியை அறிந்த அவன் வழியில் இருந்த ஒரு சுடுகாட்டில் கீழேவிழுந்து புரண்டு உடம்பெங்கும் சாம்பலைப்பூசிக் கொண்டவனாய்ச் சிரித்து 'அரஹர' என்று சொல்லி செல்ல அதனைக் கண்டு இவ்வரசன், "இவ் அடியவரைக் 'கள்வன்' என்றல் தகாது" என்றுசொல்லி விடு வித்துவிட்டான்.

(2) எப்பொழுதும், 'சம்போ, சங்கர,மகாதேவ' என்று சொல்கின்ற இவன் காதில் ஒரு நாள் நள்ளிரவில் காட்டில் குறுநரிகள் ஊளையிட்டசத்தம் கேட்க, 'சம்பு' என்றும், 'சம்புகம்' என்றும் பெயர் பெற்றுள்ள அவைகள் சம்புவைப் பாடித் தோத்திரிக்கின்றன - எனக் கருதி, அவைகள் பனியின் குளிரால் வருந்தாதபடி ஏவலரை ஏவிப்போர்வைகள் போர்க்கக் கட்டளையிட்டான்.

(3) ஒரு சமையம் பெருமழை பெய்து ஓய்ந்தபின் தவளைகள் பல ஒருங்கே கத்த, அந்த ஓசையை அவை 'அரஹர! அரஹர!' எனச் சிவபெருமானைத் துதிப்பதாகக் கருதி அவைகளுக்குப் பரிசாக இரத்தினங்களையும், பொன் னையும் நீர்நிலைகளில் சென்று இறைக்கும்படி ஏவலர்களைக் கொண்டு செய்வித்தான்.

(4) ஒரு சமையம் சிவாலயத்தில் உள்ள சிவபெருமானது திருமஞ்சனத்திற்கு வேண்டிய எண்ணெயின் பொருட்டு அர்ச்சகன் ஒருவனிடம் செக்கில் இடும்படி அரசனது பண்ட சாலையிலிருந்து கொடுத்தனுப்பிய எள்ளில் அவ்வர்ச்சகன் சிறிது எடுத்துத் தின்னுவதைக் கண்டு சிலர் அவனைப் பிடித்துக் கொண்டு போய் இவ்வரசனுக்குக் காட்ட, இவன் அவனை விசாரித்த பொழுது அவன், 'திருமஞ்சன எண்ணெய்க்கு வைத்த எள்ளைத் தின்றவர் அடுத்த பிறப்பில் திருமஞ்சன எண்ணெய் ஆட்டும் செக்கினை இழுக்கும் எருது களாகப் பிறப்பர்' என்பது சாத்திரம். அப்பிறப்பை நான் அடைய விரும்பி இந்த எள்ளைத் தின்றேன் - என்று சொல்ல, இவன், 'நானும் அப்பிறப்பை அடைய வேண்டும்' என்று சொல்லி அவன் வாயிலிருந்து சிறிது எள்ளை எடுத்துத் தின்றான்.

(5) திருவிடை மருதூர் வீதியில்கிடந்த ஒரு தலை யோட்டினை இவன் கண்டு, 'இஃது இங்ஙனம் இங்குக் கிடத்தலால் இத்தலையைப்