பெற்றிருந்தவர் சிவலோகத்தை அடைந்திருத்தல் திண்ணம் என்று கருதி, அத்தலை யோட்டினிடம் சென்று, 'எனது தலையோடும் இவ்வாறு கிடக்க அருள்செய்வீர்' எனக் குறையிரந்தான். (6) சிவாலயத்தின் முன் ஓரிடத்தில் நாயின் மலம் இருக்கக் கண்டு அதனைத் தானே சென்று எடுத்து அப்புறப் படுத்தி ஆலயத்தைத் தூய்மை செய்தான். (7) வேப்ப மரம் ஒன்றின்கீழ் அதன் கனிகள் உதிர்ந்து கிடக்க அவை சிவலிங்கம் போலக் காணப்படு தலைக் கண்டு, 'இனிவேப்ப மரங்களில் எதுவும் வெயிலில் உலர்தலும், மழையில் நனைதலும் கூடா' என்று அவைகட்கெல்லாம் நல்ல பந்தல்கள் இடச் செய்தான். (8) திருவிடை மருதூரில் இவன் மணந்து கொண்ட பெண்ணை அவள் அழகு மிகுந்திருத்தலை நோக்கி, 'இவள் மருதவாணருக்கு ஆகட்டும்' என்று சொல்லி இரவிலே திருவிடை மருதூர்க் கோயிலிலே கொண்டு போய் விட்டான். பெருமான் அவளைச் சிவலிங்கத்தில் மறையும்படி செய்து, அவன் செயலை ஊரார் அறிதற் பொருட்டு அவளது வலக்கை மட்டும். இலிங்கத்தில் வெளியில் காண வைத்தான். அதனால் இச்செய்தி ஊரெங்கம் பரவ இவன் கோயிலில் சென்று, 'இக் கை நான் பற்றிய கை' என்று ஏற்கவில்லையோ என்றான். அதனால் பெருமான் அக்கையையும் மறைத்துவிட்டான். இச்செவிவழிச் செய்திகள் பழைய திருவிளையாடற் புராணத்து, 'வரகுணனுக்குச் சிவலோகம் காட்டிய திருவிளையாடல்' கூறுமிடத்தில் சிறிது வேறுபாடுகளுடன் கூறப்பட்டன. இப்பாண்டியனது வரலாறு இத் திருவிடை மருதூர்த் தலத் தோடு தொடர்புடையதாய் இருத்தலால் ஆசிரியர் இவற்றை யெல்லாம் இங்கு எடுத்தோதினார். 'இவற்றால் எல்லாம் அறியப்படுவது வரகுண பாண்டியன் பெரியசிவபத்தன்' என்பது என்பார். 'பெரிய அன்பின் வரகுண தேவர்'என்றார். இம் மன்னனை இவனது பத்தியைக் கருத்துட் கொண்டு மாணிக்க வாசகர் தமது திருக்கோவையாரில் - குறித்திருக்கின்றார். திருமுறைகளை வகுத்தமைத்த நம்பியாண்டார் நம்பிகளும் தமது கோயில் திருப்பண்ணியர் திருவிருத்தத்துள் குறித்தார். மிகப் பிற்காலத்தில் கல்வெட்டுக்களில் 'வரகுணன்' என்னும் பெயருடைய இருவர் பாண்டியர் குறிக்கப் பட்டுள்ளனர் அவருள் எவனையும் இப் பெரிய அன்பின் வரகுண தேவராகத் துணிதற்குச் சிறிதும் ஆதாரம் இல்லை. ஆயினும் இக்கால ஆராய்ச்சியாருள் ஒரு சிலர், பெயர் ஒன்றே பற்றி, 'அவ் இருவருள் ஒருவனே இப் பெரிய அன்பின் வரகுண தேவர்' எனக் கூறுகின்றார்கள். அங்ஙனம்
|