பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை668

வெண்பா

890.வழிபிழைத்து நாமெல்லாம் வந்தவா செய்து
பழிபிழைத்த பாவங்கள் எல்லாம் - பொழில்சூழ்
மருதிடத்தான் என்றொருகால் வாயாரச் சொல்லிக்
கருதிடத்தாம் நில்லா கரந்து.

29


கூறுவோருள் ஒருசாரார். 'முதல் வரகுணனே இங்குக் குறிக்கப்பட்டான்' என்றும், மற்றொருசாரார், 'இரண்டாம் வரகுணனே இங்குக் குறிக்கப்பட்டான்' என்றும் கூறித் தம்முள் மாறுபடுவர். அம்மாறுபாடுதானே. 'அவ் இருவருள் எந்த ஒருவனையும், இங்குக் குறிக்கப்பட்ட வரகுண தேவர்' எனத் துணிதற்கு ஆதாரம் இன்மையைக் காட்டுவதாகும்.

'அனையவர் ஒருபால் நிற்க' என்க.பாடு - பெருமை, "ஓர் பாடும் இன்றி" என்பதை,'பாடு ஒன்றும் இன்றி" என்பதை, 'பாடு ஒன்றும்இன்றி' என மாற்றிக் கொள்க. ஒன்று - சிறிது.இன்றி - இன்மையல்ல. சுத்தன் - பரிசுத்தன். ஆணவமலம் நீங்கப் பெற்றவன். இன்னும் - அநாதிதொட்டு இன்றுகாறும். 'இன்னும் சுத்தனாய்த்தோன்றாத கடையேனாய் உள்ளேன்' என்க. தோன்றாத -பிறவாத. "சுத்தனாய்த் தோன்றாத" எனவே,அசுத்தனாய்த் தோன்றினமை பெறப்பட்டது. படவே,'அவர்போலப் பெரும் பதம் பிழைய வரம் பெறல்கூடாதவனா கின்றேன்' என்பதாம். இவ்வாற்றால்யான் நின்னை இறைஞ் சுதல் முதலியவற்றைச் செய்யேனாயினும் அவற்றைச் செய்ய விரும்பும் அளவில் உள்ளேன் என்க. கண்டாய், முன்னிலை யசை. உலகனைத்தும் அவனுடையன என்பது கூறுவார் "நின்உலகனைத்தும்" என்றாராயினும். 'உலகனைத்தும்' எனவாளா கூறிப் போதலே கருத்து. "நன்மை தீமை என்னும் பண்புகள் அவற்றையுடைய பொருள்மேல்நின்றன. "ஆனவை" என்பது எழுவாய் உருபு."ஆனவை" என்றாராயினும், 'ஆனவை உறவாதல் 'என்றலே கருத்து. 'நற்பொருளோடு தீப் பொருளையும் உண்டாக்குதல் உனது கருத்தாகின்ற நிலைமையில் தீமைக்கு இடம் நான் ஒருவனே போதும்;' (பிறரோ, பிறிதோ வேண்டா) என முடிக்க.

என்னை வகுத்திலையேல்இடும்பைக் கிடம்
யாது சொல்லே1

என அப்பரும் அருளிச்செய்தார். எனது இயல்பு இதுவாயினும். கருதி யிருத்தல் ஒன்றே பற்றிஎனக்கும் அருள்புரிதல் வேண்டும்' என்பது குறிப்பால் உணர்த்தப்பட்டது.

890. குறிப்புரை: "நாமெல்லாம்" என்பதை முதலிற் கொள்க. வழி- நல்வழி. பிழைத்து - தவறி. வந்தவா - தாமாக எதிர்வந்த


1. திருமுறை - 4.105.2.