பக்கம் எண் :

669திருவிடைமருதூர் மும்மணிக்கோவை

கட்டளைக் கலித்துறை

891.கரத்தினில் மாலவன் கண்கொண்டு நின்கழல் போற்றநல்ல
வரத்தினை ஈயும் மருதவப் பாமதி ஒன்றுமில்லேன்
சிரத்தினு மாயென்றன் சிந்தையு ளாகிவெண் காடனென்னும்
தரத்தின மாயது நின்னடி யாந்தெய்வத் தாமரையே.

30

திருச்சிற்றம்பலம்


செயல்களை. செய்து - நன்று தீது ஆராயாமலே செய்து. 'பழியாகப் பிழைத்த' என்க. பிழைத்த - தவறாக ஒழுகிய. மருது - திருவிடை மருதூர். "கருதிடத்தான்" என்பதில் தான் அசை. கரந்து - மறைந்து. 'மறைந்து அருவமாயும் நில்லாது போம்' என்க.

891. குறிப்புரை: 'மாலவன் கண்கரத்தினில் கொண்டு' என்க. 'கண்ணைப் பறித்தெடுத்து' என்ற படி, 'மதி ஒன்றும் இல்லேனது' என ஆறாவது விரிக்க. ஒன்றும் - சிறிதும். தாம் -மேன்மை; என்றது புகழை. 'மருத அப்பா, நின் அடியாம் தாமரை சிரத்தினும் ஆய், சிந்தையுளாகித் தரத்தினும் ஆயது' என இயைத்து முடிக்க. 'இது நின் கருணை இருந்தவாறு' என்பது குறிப்பெச்சம்.

திருவிடைமருதூர் மும்மணிக்கோவை முற்றிற்று