893. | ஏகம்ப னேயென்னை ஆள்பவ னேயிமை யோர்க்கிரங்கிப் போகம்பன் னாளும் கொடுக்கின்ற நாயக பொங்கும்ஐவாய் நாகம்பொன் னாரம் எனப்பொலி வுற்றுநல் நீறணியும் ஆகம்பொன் மாமலை ஒப்பவ னேயென்பன் ஆதரித்தே. | | 2 |
894. | தரித்தேன் மனத்துன் திகழ்திரு நாமம் தடம்பொழில்வாய் வரித்தேன் முரல்கச்சி ஏகம்ப னேயென்றன் வல்வினையை அரித்தேன் உனைப்பணி யாதவர் ஏழைமை கண்டவரைச் சிரித்தேன் உனக்கடி யாரடி பூணத் தெளிந்தனனே. | | 3 |
895. | தெளிதரு கின்றது சென்றென் மனம்நின் திருவடியில் அளிதரு நின்னருட் கையம் இனியில்லை அந்திச்செக்கர் ஒளிதரு மேனியெம் ஏகம்ப னேயென் றுகந்தவர்தாள் தளிதரு தூளியென் றன்தலை மேல்வைத்த தன்மைபெற்றே | | 4 |
896. | பெற்றகந் தேனேன்றும் அர்ச்சனை செய்யப் பெருகுநின்சீர் கற்றுகந் தேனென் கருத்தினி தாக்கச்சி ஏகம்பத்தின் பற்றுகந் தேறும்உகந்தவ னேபட நாகக்கச்சின் கற்றுகந் தேர்விடை மேல்வரு வாய்நின் துணையடியே. | | 5 |
893. குறிப்புரை: ஆகம் - திருமேனி. ஆதரித்து - விரும்பி. ஏனைய வெளி. 894. குறிப்புரை: தரித்தேன் - தாங்கினேன். 'உன்திருநாமம் மனத்துத் தரித்தேன்' என்க. வரித்தேன் - இசைபாடும் 'தேன்' என்னும் வண்டுகள். 'தரித்தேன்; அதனால் என் வல்வினையை அரித்தேன்' என உரைக்க. ஏழைமை - அறியாமை. சிரித்தேன் - இகழ்ந்தேன். 895. குறிப்புரை: 'அந்திச் செக்கர்....தன்மை பெற்று என் மனம் நின் திருவடியில் சென்று தெளிதருகின்றது; இனி நின் அளிதரு அருட்கு ஐயம் இல்லை' - என இயைத்து முடிக்க." தெளிதருகின்றது" என்பதன்பின், 'அதனால்' என்னும் சொல்லெச்சம் வருவிக்க. அளிதரல் - கனிதல். "தெளிதரு, அளிதரு" என்பற்றில் 'தரு' துணைவினை, அருட்கு - அருள் கிடைத்தற்கு. 'திருவடிவம்' என்பது பாடமாயின், 'திருவடிவத்தின் கண்' என ஏழாவது விரித்துக் கொள்க. 896. குறிப்புரை: "கச்சி ஏகம்பத்தின்" என்பது முதலாகத் தொடங்கியுரைக்க. கச்சி, நகரம். ஏகம்பம், அந்நகரத்தின்கண் உள்ள ஓர் இடம். பற்று - நீங்காதிருத்தல். உகந்து - விரும்பி ஏறும் - இடபமும். உம்மை இறந்தது தழுவியது. இடபத்தை உகந்தமையாவது,
|