899. | நலந்தா நானொன்று சொல்லுவன் கேண்மின்நல் லீர்களன்பு கலந்தர னார்கச்சி ஏகம்பம் கண்டு கனல்திகிரி சலந்தரன் ஆகம் ஒழிக்கவைத் தாய்தக்கன் வேள்வியெல்லாம் நிலந்தர மாகச்செய் தாயென்று பூசித்து நின்மின்களே. | | 8 |
900. | மின்களென் றார்சடை கொண்டலென் றார்கண்டம் மேனிவண்ணம் பொன்களென் றார்வெளிப் பாடுதன் பொன்னடி பூண்டுகொண்ட என்களென் றாலும் பிரிந்தறி யார்கச்சி ஏகம்பத்தான் தன்களென் றாருல கெல்லாம் நிலைபெற்ற தன்மைகளே. | | 9 |
"மையல்" என்றது இங்குத் திருவருட் பித்தினை. இதனைத் தத்துவத்துறையில் 'சிவராகம்'1 என்பர். 'இணங்கு' என்னும் முதனிலை வலித்தல் பெற்றப் பெயராயிற்று. மற்றோர் - பிறர். அரவின் குணக் குன்ற வில் - பாம்பாகிய நாணினையுடை மலையாகிய வில், கணக்கு - முறைமை. கணக்கு உடையதனை, "கணக்கு" என்றார். நலம் - இன்பம். இங்ஙனம் தம் அடிமைத் திறத்தை வலியுறுத்தவாறு. 899. குறிப்புரை: "நல்லீர்கள்" என்னும் விளியை முதற்கண் கொள்க. 'உங்கள் செயல் நலம் தர' என வினைமுதல் வருவித்துக் கொள்க. கனல் திகிரி - நெருப்புப் போலும் கொடிய சக்கரம். "எல்லாம்" என்பது எஞ்சாமை குறித்து நின்றது. நிலம் தரமாக - பூமியளவாக; தரைமட்டம் ஆகும்படி. எதுகை கெடுதலையும் நோக்காகது, 'நிரந்தரமாக' என ஓதுதல் பாடம் அன்று. 900. குறிப்புரை: 'கச்சி ஏகம்பத்தானைத் தன் பொன்னடி பூண்டு பிரிந்தறியார்' எனத் தொகுக்கப்பட்ட இரண்டன் உருபை விரித்து மாறிக் கூட்டிப் பின்னும். "தன்கண் என்றார்" என்பதை இறுதியில் வைத்து உரைக்க. 'சடை மின்கள்' என்றார்; 'கண்டம் கொண்டல்' என்றார்; 'மேனி வண்ணம் புலப்பாடு பொன்கள்' என்றார்; கொண்ட என்கள் என்றாலும், உலகெல்லாம் நிலைபெற்ற தன்மைகள் தன்கள் என்றார் - என்பது இப்பாட்டின் முதன்மைப் பொருள். "மின்கள்" என்பதற்கு ஏற்ப, 'சடைகள்' என உரைக்க. உறுப்பின் பன்மையால் புலப்படும் பலவாயின. "பொன்கள்" என்னும் பன்மை அதன் சாதி பற்றி வந்தது. அச்சாதியாவன. 'எவன்' என்னும் வினாப் பெயர் 'என்' என்று ஆகி, 'கள்' விகுதி ஏற்று
1. சிவஞானபோத மாபாடியம் - சூ - 2. அராக தத்துவம்.
|