903. | பூங்கொத் திருந்தழை யார்பொழில் கச்சியே கம்பர்பொற்பார் கோங்கத் திருந்த குடுமிக் கயிலையெம் பொன்னொருத்தி பாங்கொத் திருந்தனை ஆரணங் கேபடர் கல்லருவி ஆங்கத் திருந்திழை ஆடிவந் தாற்கண்(டு) அடிவருத்தே. | | 12 |
904. | வருத்தந் தரும்மெய்யுங் கையில் தழையும்வன் மாவினவும் கருத்தந் தரிக்கும் நடக்கவின் றைய கழல்நினையத் |
நிற்றலின், ஓர் என்பதற்கு முடிவாயிற்று. முடியும் காலம் வரையில். "நம்" என்பதை 'நம் புனம்' என முன்னே கூட்டுக. 903. குறிப்புரை: 'பூங்கொத்தும், இரு தழையும் ஆர் பொழில்' இரு - பெருமை. பெரியன. ஆர் - நிறைந்த. 'பொற்பு ஆர் கயிலை' என இயையும். 'கோங்கத்தொடு' என உருபு விரிக்க. கோங்கு, ஒருவகை மரம். ஆர் அணங்கு - அரியளாகிய தேவ மாது. "ஆர் அணங்கே" என்பதை முதலிற் கொண்டு உரைக்க. எம் பொன் ஒருத்தி பாங்கு ஒத்து இருந்தனை - எங்கள் பொன்போல்பவளாகிய மகள் ஒருத்தியின் தன்மை யோடே ஒத்த தன்மையை உடையவளாய் இருக்கின்றாய். (ஆகையால்) 'இப்பொழுது அருவி ஆடி வரச் சென்றுள்ள அவள் இங்கு வந்தபின் நீ செல்' என்க. ஆங்கு - அம்மலை யிடத்தில், திருந்து, இழை - திருத்தமான அணிகலன்களை யுடையவள். 'படர் கல் அருவி ஆடி வந்தால்' என இயையும். படர் - ஓடுகின்ற. அருவி. கல் - மலை. "அடி வருத்து" என்பது, 'உன் பாதத்தை நோகச் செய்' எனப் பொருள் தந்து, 'நடந்து செல்' என்னும் கருத்தை உணர்த்திற்று. இவ்வாற்றால் இப்பாட்டுப் பாங்கி மதியுடன்பாட்டின்பின் ஒருசார் ஆசிரியர் வேண்டும் 'நாண நாட்டம்' என்பதில், 'வேறுபடுத்திக் கூறல்' என்னும் துறையது. அஃதாவது, தலைவி அருவியாடும் ஆரவாரத்தில் தோழியர் கூட்டத்தினின்றும் பிரிந்து சென்று தலைவனொடு கூடி வந்தபொழுது அவள் முன்னையினும் மிக்க மகிழ்ச்சியும், பொலியும் உடையனாய் இருத்தலைக் கண்டு அவளது செயலை நன்கு உணர்ந்து கொண்ட தோழி தான் அங்ஙனம் உணர்ந்து கொண்டதைத் தலைவிக்குக் குறிப்பால் உணர்த்து வாளாய், அவள் நாணும்படி, அவளைத் தான் தன் தலைவியாக உணராமல், வரையுரை தெய்வமாக உணர்ந்தாள் போலக் கூறுதல். அங்ஙனம் கூறுதலால் தலைவி தனது புதுநலத்தினையும், அதன் காரணத்தையும் தோழி தெரிந்து கொண்டாள் என அறிந்து நாணமுற்று, ஏதேனும் கூறுவாள். தனது களவொழுக்கத்தைத் தோழிக்கும் மறைத்து ஒழுகிய தலைவி பின் மறையாது தோழிக்குக் கூற உடன்படுதல் இக்கூற்றிற்குப் பயன். 904. குறிப்புரை: "ஐய" என்பதை முதலிலும், "நடக்க" என்பதை இறுதியிலும் கூட்டியுரைக்க. மெய் - உடம்பு. அது வருத்தந்தருதற்குக்
|