| திருத்தந் தருளும் திகழ்கச்சி ஏகம்பர் சீர்க்கயிலைத் துருத்தந் திருப்பதன் றிப்புனம் காக்கும் தொழிலெமக்கே. | | 13 |
905. | எம்மையும் எம்மைப் பணிகொள்ளும் கம்பர் எழிற்கயிலை உம்மையும் மானிடம் இப்புனத் தேவிட்டு வந்தமைந்தர் தம்மையும் மானையும் சிந்தையை நோக்கம் கவர்கவென்றோ அம்மையும் அம்மலர்க் கண்ணும் பெரியீர் அருளுமினே. | | 14 |
காரணம் வேட்டையாடி வருதல். தழை - பூவும், பச்சிலையும் விரவ, அழகிய மேகலாபரணம்போலக் கைவன்மையால் தொடுக்கப்பட்டதொரு உடை வகை. இஃது இனமகளிரது கண்ணையும், கருத்தையும் கவர்வதாய் இருக்கும். வேட்டையாடி வருபவன் கையில் நாணில் வைத்துத் தொடுக்கப்பட்ட வில், அல்லது ஈட்டி முதலிய கருவிகள் இருக்க வேண்டுவதுபோய், இளமகளிரது மனத்தைக் கவரும் தழை யிருத்தலைச் சுட்டி, 'உம் வினா பொய்யாக வினாவும் வினாவாகும்' என்பதைத் தோழி தலைவனுக்குக் குறிப்பால் உணர்த்தி நகைப்பாள், "வருத்தம் தரும் மெய்யும், மா வினவும் கருத்தும், (இடையே) கையில் தழையும்" தம்முள் ஒவ்வாதனவாய் உளவே - என்பாள், "கருத்து அந்தரிக்கும்" என்றாள். "கருத்து" என்பதிலும் 'கருத்தும்' என எண்ணும்மை விரிக்க. 'வேறுபாடு' என்னும பொருட்டாகிய 'அந்தரம்' என்னும் வடமொழிப் பெயர் அடியாக, "அந்தரிக்கும்" என்னும், வினைமுற்றுப் பிறந்தது. அந்தரிக்கும் - வேறுபடா நின்றன. 'இன்று அந்தரிக்கும்' என இயைக்க. இன்று இப்பொழுது. திரு - திருவருள் 'கயிலையில் எமக்கு இப்புனம் காக்கும் தொழில் (உளது); அதைத் தவறவிடுவது எமக்குத் தொழில் அன்று; ஆதலின் நீவிர் இவ்விடம் விட்டு அப்பால் நடக்க' என "தொழில்" என்பதன்பின் 'உளது' என்பது எஞ்சி நின்றது. 'தீமை, பிழை' முதலிய பொருள்களைத தருவதாகிய 'துர்' என்னும் வடமொழி இடைச்சொல் ஈற்றில் உகரம் பெற்று வந்தது, 'நிர்' என்பது 'நிரு' என வருதல்போல, இப்பாட்டு தலைவன் பாங்கியை மதியுடன்படுத்தலில் கெடுதி வினாதலுள் வேழம் வினாதல் துறையது. தோழி இங்ஙனம் இகழ்ந்துரைத் தாளாயினும் தலைவியது நிலைமையைக் குறிப்பால் உணர்ந்து இருவரும் ஒரு மனத்தராயதை உணர்ந்தேவிடுவாள். 905. குறிப்புரை: எம்மையும் - எப்பிறப்பிலும். கம்பர் - ஏகம்பர். உம்மையும் - (எம்மொடு) உங்களையும். மானிடம் - மக்கட் பிறப்பு. 'மானிடமாக' என ஆக்கம் விரிக்க. விட்ட - விட்டன. வாழவிட்டன. வாழ்வோர் பலராதல் பற்றி விட்டதாகிய தொழிலும் பலவாயின. 'கயிலையில் இப்புனத்தே விட்டன' என்க. 'விட்டு' என்பது பாடம் அன்று. 'இங்கு வந்த மைந்தர்தம்மையும்' என்க. 'சிந்தையைக் கவர்தல்' என்பது 'வசப்படுத்துதல்' என்னும் பொருட்டாகலின் அது
|