906. | அருளைத் தருகம்பர் அம்பொற் கயிலைஎம் ஐயர்அம்பு இருளைக் கரிமறிக் கும்மிவர் ஐயர் உறுத்தியெய்ய வெருளக் கலைகணை தன்னொடும் போயின வில்லிமைக்கு மருளைத் தருசொல்லி எங்கோ விளையுண்டிவ் வையகத்தே. | | 15 |
907. | வையார் மழுப்படை ஏகம்பர் ஈங்கோய் மலைப்புனத்துள் ஐயார் வருகலை ஏனங் கரிதொடர் வேட்டையெல்லாம் பொய்யான ஐயர் மனத்த(து)எம் பூங்கொடி கொங்கைபொறாப் பையார் அரவிடை ஆயிற்று வந்து பரிணமித்தே. | | 16 |
'தம்மை, மானை' என்னும் இரண்டாம் வேற்றுமைகட்கு முடிபாயிற்று. மானைச் சிந்தை கவர்தல், அதன்நோக்கினும் சிறந்த நோக்கு ஆதலால். அம் மை - அழகிய மை. 'மையும், கண்ணும் நோக்கத்தால் கவர்க என்றோ' என இயைக்க. "பெரியீர்" என்றது தோழியை. இதனை முதலிற் கொள்க. இப்பாட்டு, பாங்கியைத் தலைவன் மதியுடம்படுத்தலில் பிற வினாதல் துறையது. 906. குறிப்புரை: இப்பாட்டுத் தலைவன் தலைவி தோழியுடன் இருக்கும், பொழுது சென்று 'கலைமான் ஒன்று கணைதைத்த உடலுடன் இவ்வழியாகச் சென்றதோ' என, அதுபற்றி அவரை நோக்கி, வினாயதற்குத் தோழி தலைவியை நோக்கிக் கூறியது. "மருளைத் தரு சொல்லி" என்பது தோழி தலைவியை விளித்தது. மருள் - மயக்கம். சொல்லி - சொல்லை உடையவளே. 'எம் ஐயர் (தமையன் மாருடைய) அம்பு கரியை (யானையை) மறிக்கும். (எய்த இடத்திற்றானே மடிந்து விழச் செய்யும், இவர் ஐயர் (இவர் அவர்களினும் மேலானவர் - வேடரினும் சிறந்த அரசர். இவர் தம் அம்பை ஒரு மான்மீது) உறுத்தி எய்ய, (ஆழமாகப் பாயும்படி எய்ய) அந்த மான் அந்தக் கணையையும் பறித்துக் கொண்டு எங்கோ போய்விட்டது. போயின வில்லிமைக்கு (அப்படிப் போய்விடும்படி எய்த இவரது வில் வீரத் தன்மைக்கு) இவ் வையகத்து எங்கோ விலை உண்டு' எனக் கூறித் தோழி நகையாடினாள். கம்பர் - ஏகம்பர். இருள் கரி - இருள்போலும் யானை. ஐக் கரிய - தலைமை யானை. வெருள் - அச்சம் மிகுந்த 'எம் ஐயர் அம்பு தலைமை யானையை அங்கேயே வீழ்த்தும். இவ்ஐயர் அம்பு எய்ய, அச்சம் மிகுந்த ஒரு மான் அந்த அம்பையும் பறித்துக்கொண்டு ஓடி விட்டது' என்றாள். 907. குறிப்புரை: வை ஆர் - கூர்மை பொருந்திய. 'ஐயர்' என்பது நீட்டல் பெற்று "ஐயார்" என வந்தது. 'ஐயார் தொடர் வேட்டை'
|