பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை678

908.பருமுத் துதிர்த்திடும் சீர்மத்த யானை நுதல்பகுந்திட்(டு)
உருமொத்த திண்குரற் சீயம் திரிநெறி ஓங்குவைவாய்ப்
பொருமுத் தலைவேற் படைக்கம்பர் பூங்கயி லைப்புனத்துள்
தருமுத் தனநகை தன்நசை யால்வெற்ப சார்வரிதே.

17


என இயையும். "ஐயார், ஐயர்" என்றவை தலைவனை. 'கலையையும், ஏனத்தை கரியையும் தொடர் வேட்டை' என்க. பொய் ஆன - பொய் ஆயின. 'ஐயர் மனத்தது ஒவ்வொன்றாகப் பரிணமித்து வந்து, முடிவில் பூங்கொடி இடையாயிற்று' என்க. பின் வந்த "ஐயர்" என்பது 'அவர்' என்னும் சுட்டுப் பெயரளவாய் நின்றது. இப்பாட்டின் துறையும் முன் பாட்டின் துறையே.

இருவரும் உள்வழிச் சென்ற தலைவன் முதற்கண், 'இவ்வழியாக, அம்பு தைத்த உடலுடன் மான் ஒன்று போயிற்றா' என்று அவர்களை வினவினான்; விடை யில்லை; பின்பு காட்டுப் பன்றி போயிற்றா'; என்றான்; விடையில்லை; பின்பு 'யானை போயிற்றா' என்றான்; விடையில்லை. (அதனால் அவன் பின்பு அவர்களை நெருங்கிச் சென்று, 'என்ன, ஒருவர் வந்து வினவினால் யாதும் விடைசொல்லா திருக்கின்றீர்கள்? உங்களைப் பார்க்கும் பொழுது - உங்களுக்கு இடை யிருக்கின்றதா - என்று ஓர் ஐயம் எழுகின்றது. இருக்கின்றதா? இல்லையா? சொல்லுங்கள்' என்றான். அதைக் கேட்ட தோழி மேற்காட்டியவாறு சொல்லி நகையாடினாள். தொடர்தல் - பின்பற்றிச் செல்லல். 'இவர் முதற்கண் குறித்த மான் பன்றி, யானை இவைகளைப் பின்பற்றி சென்று ஆடிய வேட்டைகள் எல்லாம் வெறும் பொய்யாகிவிட்டன. அவ்வேட்டைகள் முதலில் மானாய் இருந்தது. பன்றியாகப் பரிணமித்து, பின் பன்றி யானையாகப் பரிணமித்து, முடிவில் எங்கள் பூங்கொடி போல உள்ள உனது இடையாகி நிலைபெற்றது' எனக் கூறி நகைத்தாள். மனத்தது மனத்தில் உள்ள கருத்து. எனவே, 'அஃதே உண்மை' என்றும், 'முன்னர்க் கூறியன எல்லாம் பொய் என்றும் ஆயின. இடை சிறிதாய், மெல்லிதாதலின் அது பெரியவாய், வலியவாய் கொங்கை களைத் தாங்கலாற்றாது வருந்திற்று. பை ஆர் - படம் பொருந்திய அரவு. இடை - பாம்புபோலும் இடை.

908. குறிப்புரை: "வெற்பு" என்பதை முதலிற் கொள்க. 'முத்து உதிர்த்திடும் நுதல்' என்க. சீர் - அழகு. 'மத யானை' என்பது, "மத்த யானை" என விரித்தல் பெற்றது. நுதல் - நெற்றி பகுந்திட்டு - பிளந்திட்டு. உரும் ஒத்த - இடியோடு ஒலித்த. சீயம் - சிங்கம். நெறி - வழி. ஓங்கு - மலைமேல் இருத்தலால் ஓங்கிக் காணப்படுகின்ற. 'ஓங்கு கயிலை' என இயையும். முத்தலை வேல் - சூலம். கம்பர் - ஏகம்பர். நகைதன் நசை - நகையினை உடையாளது விருப்பம். ஆல், அசை 'வெற்ப, (உனக்குப் பிற யாவும் எளிய எனினும்) புதைத்துள் முத்தன்ன நகையாள்மேல் நசை சார்வரிது' என முடிக்க. நிரம்புதல்