909. | அரிதன் திருக்கண் இடநிரம் பாயிரம் போதணிய அரிதன் திருவடிக்(கு) அற்சித்த கண்ணுக் கருளுகம்பர் அரிதன் திருக்கங் குலியால் அழிந்த கயிலையல்லிங்(கு) அரிதென் றிருப்பதெம் பால்வெற்ப எம்மையர்க் கஞ்சுதுமே. | | 18 |
910. | அஞ்சரத் தான்பொடி யாய்விழத் தீவிழித் தன்புசெய்வோர் நெஞ்சரத் தாழ்வுகந் தோர்கச்சி ஏகம்பர் நீள்கயிலைக் குஞ்சரத் தாழ்வரை வீழநுங் கொம்புய்யக் கும்பமூழ்கும் வெஞ்சரத் தாரன வோவல்ல வோவிவ் வியன்முரசே. | | 19 |
கூடாமையால் நசையும் கொள்ளுதல் கூடாதாயிற்று. இது தன்பால் வந்து குறையிரந்த தலைவனைத் தலைவியது அருமை சொல்லி அகற்றியது. அருமையாவது, தோழி இச்செய்தியைத் தலைவிக்குத் தெரிவித்தற்குச் செவ்வியருமை. அருமை இன்றாயினும் உள்ளது போலச் சொல்லி அகற்றுதல்; அவனது காதலின் மிகுதி அறிதற்பொருட்டாம். 909. குறிப்புரை: "வெற்ப" என்பதை முதலிற் கொள்க. நிரம்பு ஆயிரம் போது அணிய அரி தன் திருக்கண் இட நிரம்பு - ஆயிரம் போது அணிய திருமால் தன் கண்ணையே இட்டமையால் எண் நிரம்பிய ஆயிரம் மலரைச் சாத்த. பறித்து அரி திருவடிவினைகளை அரித்தொழிக்கின்ற திருவடி. 'மற்றை மலருக்காக அருள்செய்யாது கண்ணாகிய மலருக்கு அருள் செய்தான்'; அஃதாவது, 'கண்ணைப் பறித்துச் சாத்தியதற்கு மகிழ்ந்து அருள்செய்தான்' என்க. கம்பர் - ஏகம்பர். மூன்றாம் அடியில் உள்ள அரி - பகைவன்; இராவணன், திருக்கு - அவனது முறையற்ற செயல்; கயிலை மலையைப் பெயர்த்தது அங்குலி - விரல். 'கம்பர் திருக்கு அழித்த கயிலை' என்க. அல் - இரவு 'கயிலையில் இங்கு நீவிர் அவ்எம்பால் இருப்பது அரிது' என்று எம் ஐயர்க்கு அஞ்சுதும் - என முடிக்க. ஐயர் - தமையன்மார். களவொழுக்கத்தில் ஒழுகிய தலைவன், 'தலைவி இற்செறிக்கப்படுதல் காரணமாக அது கூடாது' எனக் கருதி, 'ஒருநாள் இரவு உங்கள் இல்லத்தில் விருந்தினனாக வருவேன்' என 'அதுவேண்டா' எனத் தோழி விலக்கியது இது. இது, 'விருந்திறை விலக்கல்' எனப்படும். தலைவன் வேண்டுதல், 'விருந்திறை விரும்பல்' எனப்படும். இப்பாட்டில், 'மடக்கு' என்னும் சொல்லணி வந்தது. 910. குறிப்புரை: "அம் சரம்" என்றது, 'பூவாகிய அம்பு' என்றபடி. நெஞ்சு அரம் - மனமாகிய தடம். தாழ்வு - தங்குதல். தாழ் வரை - மலைச் சாரல். (இவ்வியன் முரசு) குஞ்சரம் வீழ, நும் கொம்பு உய்யக் கும்பம் மூழ்கும் வெஞ்சரத்தார் - யானை கீழே வீழ்ந்தொழியும் படியும், உம் பூங்கொம்புபோலும் மகள் தப்பிப் பிழைக்கும்படியும் யானையின் மத்தகத்தில் மூழ்கிய, கொடிய அம்பினையுடைய
|