பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை680

911.சேய்தந்த அம்மை உமைகண வன்திரு ஏகம்பத்தான்
தாய்தந்தை யாயுயிர் காப்போன் கயிலைத் தயங்கிருள்வாய்
வேய்தந்த தோளிநம் ஊச லொடும்விரை வேங்கைதன்னைப்
பாய்தந்து பூசலுண் டாங்கொண்ட தோகைப் பகடுவந்தே.

20

912.வந்தும் மனம்பெறிற் பொன்னனை யீர்மன்னும் ஏகம்பர்தம்
முந்தும் அருவிக் கயிலை மலையுயர் தேனிழிச்சித்
தந்தும் மலர்கொய்தும் தண்தினை மேயுங் கிளிகடிந்தும்
சிந்தும் புகர்மலை கைச்சுமிச் சாரல் திரிகுவனே.

21


அவருடையனவோ? அல்லவோ? 'குஞ்சரந் தாழ்வரை' என்பது எதுகை நோக்கி கும்பம் - யானை மத்தகம். வலிந்து நின்றது.

இது, களவொழுக்கத்தில் களிறு தரு புணர்ச்சியால் ஒருவனுக்கு உரியளாகிவிட்ட தலைவி தன் இல்லத்தில் மணமுரசு முழுங்குதலைக் கேட்டு, 'இம்முரசொலி என் தலைவர் மணத்தனவோ, பிறர் மணத்தனவோ' என ஐயுற்றுக் கலங்கியது.1

911. குறிப்புரை: "வேய் தந்த தோளி" என்பதை முதலிற் கொள்க. அது தோழி தலைவியை விளித்தது. தந்த, உவம உருபு. சேய் - முருகன். 'சேயை' என இரண்டாவது விரிக்க. "கைப் பகடு வந்து" என்பதை, "தயங்கிருள்வாய்" என்பதன் பின்னரும், "பூசல் உண்டாம்" என்பதை இறுதியிலும் கூட்டி யுரைக்க. தயங்கு - நிறைந்த. வினா - வாசனை. வேங்கை - வேங்கை மரம். ஊசல் வேங்கை மரக் கிளையில் கட்டப்பட்டிருப்பதால், "ஊசலொடும் வேங்கைதன்னைப் பாய்தந்து கொண்டதோ" என்றாள். கை - தும்பிக்கை. பகடு - யானை. பூசல் - ஆரவாரம் உண்டாம் - உண்டாகாநின்றது. இரவுக் குறிக்கண் தலைவன் வந்தமையறிந்த தோழி அதனைத் தாய் அறியாவாறு தலைவிக்குக் கூறியது. இது வரவுணர்ந்துரைத்தல்2 எனப்படும்.

912. குறிப்புரை: "பொன் அனையீர்" என்பது, தலைவனை தோழியை விளித்தது. அதனை முதலிற் கொள்க. பொன் - இலக்குமி. மனம் பெறில் - இசைவு கிடைக்குமாயின் 'கயிலை மலையின்கண்' என ஏழாவது விரிக்க. சிந்தும் - எதிர்ப்பட்ட வரை அழிக்கின்ற. புகர் மலை - முகத்தில் புள்ளிகளை யுடைய மலை போலும் யானை. கைச்சல் - கட்டுதல்; அடக்குதல்; இது தலைவன் பாங்கியை மதியுடம்படுத்தற்கண் குறையுற்று நின்றது.3


1. திருக்கோவையார் - 297.
2. திருக்கோவையார் - 160.
3. திருக்கோவையார் - 63.