பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை68

122

பணிந்தும், படர்சடையான் பாதங்கள் போதால்
அணிந்தும், அணிந்தவரை ஏத்தத் - துணிந்தும்
எந்தையார்க்(கு) ஆட்செய்யப் பெற்ற இதுகொலோ
சிந்தையார்க் குள்ள செருக்கு. 

79


123.

செருக்கினால் வெற்பெடுத்த எத்தனையோ திண்தோள்
அரக்கனையும் முன்னின்(று) அடர்த்த - திருத்தக்க
மாலயனுங் காணா(து) அரற்றி மகிழ்ந்தேத்தக்
காலனையும் வென்றுதைத்த கால். 

80



சிவன்எனும்நாமம் தனக்கே உடைய

செம்மேனிஎம்மான்

அவன்எனை ஆட்கொண் டளித்திடுமாயின்

அவன்றனை யான்

பவன்எனும் நாமம் பிடித்துத் திரிந்து

பன்னாள் அழைத்தாள்

இவன்எனைப் பன்னாள் அழைப்பொழியான் என்று

எதிர்ப்படுமே.1

என்பது அப்பர் திருமொழி.

உழப்பின் வாரா உறுதிகள் உளவோ!
கழப்பின் வாராக் கையற வுளவோ!2

என்றார் பட்டினத்தடிகள்.

122. அ. சொ. பொ.: “படர்சடையான் பாதங்கள்” என்பதை முதலிற் கொள்க. போது - பேரரும்பு. அணிதல் - அலங்கரித்தல். வினைக்கண் வந்த எண்ணும்மைகள் ஆட்செய் யும் வகைகளை எண்ணி நின்றது. கொல், அசை ஓகாரம் சிறப்பு. “சிந்தையார்” என உயர்த்தற்கண் அஃறிணை உயர் திணையாய் மயங்கிற்று. செருக்கு - பெருமிதம். அஃதாவது, “ஒருவரை மதியாது உறாமைகள் செய்தல்”.3 தமது பெருமிதத் தைத் தம் சிந்தைமேல் வைத்து, அதனை வேறுபோற் கூறினார். “சிவனுக்கு ஆட் செய்யப் பெறுகின்ற பேறு கிடைத்தற்கரியது’ என்பதைக் குறித்தவாறு.

123. அ. சொ. பொ.: “திருத் தக்க” என்பது முதலாகத் தொடங்கியுரைக்க. திரு - திருமகள். ‘திருநாவுக்குத் தக்க’ என்னும் நான்கன் உருபு தொகுத்தலாயிற்று. ‘திருவினால் தக்க’ என நான்காவது விரிப்பின்


1. திருமுறை - 4.112.9

2. 11ம் திருமுறை - திருவிடைமருதூர் மும்மணிக் கோவை - 10

3. திருமுறை - 7.68.1.