பக்கம் எண் :

69அற்புதத் திருவந்தாதி

124.

காலனையும் வென்றோம்; கடுநரகம் கைகழன்றோம்;
மேலை இருவினையும் வேரறுத்தோம்; - கோல
அரணார் அவிந்தழிய வெந்தீஅம் பெய்தான்
சரணார விந்தங்கள் சார்ந்து. 

81

125.

சார்ந்தார்க்குப் பொற்கொழுந்தே ஒத்திலங்கிச் சாராது
பேர்ந்தார்க்குத் தீக்கொழுந்தின் பெற்றியதாம்; - தேர்ந்துணரில்


மாலுக்குக் குறையுண்டாகும். “காணாது” என்பதை, ‘காணப்படாது நின்று’ எனச் செயப் பாட்டு வினைப் பொருட்டாக்கி, அதனை, ‘ஏத்தக் காணப் பட்ட’ என ஒரு சொல் வருவித்து முடிக்க. இல்லையேல், “ஏத்த” என்பதற்கு முடிபின்றாம். ‘காணப்பட்ட கால்’ என்க. “வென்று உதைத்த” என்பதனை, ‘உதைத்து வென்ற’ எனப் பின் முன்னாக வைத்து, விகுதி பிரித்துக் கூட்டி யுரைக்க. ‘கால் அடர்த்த’ என முடியும். அடர்த்த அடர்த்தன; ஒறுத்தன. வெற்பு - கயிலை மலை. “எத்தனையோ” என்றது, ‘பல’ என்ற வாறு. எண் வறையறை கூறாது இங்ஙனம் கூறியது, அவனது வலிமிகுதியைக் குறித்து, அதனானே அவன் செருக்கிய தன் காரணத்தை உணர்த்தற்கு. அரக்கன், இராவணன், உம்மை, பிறருக்கில்லாத அவனது தலைகளும், தோள்களும் பற்றிய சிறப்பைக் குறித்தது. முன் நிற்றல், அனைத்துறுப்புக்களும் பின் நிற்கத் தான் முன்னிற்றல். அதனால், ‘அஃதே, காண்பார்க்கு முதலிற் காணப்படுவது’ என்பதும் பெறப்பட்டது. ‘அத்துணை வலியன் தோளால் முயன்று எடுத்த மலையை, தாளால் (அதனுள்ளும் ஒரு விரலால்) தடுத்து ஒறுத்தவனோடு இகலி நிற்பார் யாவர்’ என அவனது அளவிலாற்றலைக் குறித்து, அதனானே அவனது தன்வயம் உடைமையையும் குறித்தவாறு.

124. அ. சொ. பொ.: “கோல அரணார்” என்பது முதலாகத் தொடங்கி யுரைக்க. கோலம் - அழகு. அரண் - மதில். முப்புரம். அரனார் - அவற்றை யுடைய அசுரர். ‘அவிந்து அழிய’ என்பது ஒருபொருட்பன்மொழி. தீ - தீக்கடவுள் ‘தீக் கடவுளாகிய அம்பு’ - என்க. சரண அரவிந்தங்கள் - திருவடி யாகிய தாமரை மலர்கள். சார்ந்து - சார்ந்தமையால். கழன்றோம் - நீங்கினோம். கை, இடைச்சொல், மேல், இடமேல். அது காலத்தால் ‘கீழ்’ எனப்படும். ஐ, சாரியை, மேலை வினை - முன்னே சேர்ந்து கிடக்கின்ற வினை; சஞ்சித கன்மம். ‘வேரோடு என மூன்றாவது விரிக்க. சஞ்சிதம் இன்மையால், ‘பிறவியில்லையாயிற்று’ என்பது கருத்து.

125. அ. சொ. பொ.: “தாழ் சுடரோனை” என்பது முதலாகத் தொடங்கி, “தேர்ந்து உணவில்” என்பதை ஈற்றிற் கூட்டி உரைக்க. தாழ் சுடரோன். மறைகின்ற சூரியன். எனவே, செங்கதிர், மாலை வெயிலாம். சாய்தல் - தோல்வியுறுதல். ‘சாயும் வண்ணன்’ என