| தாழ்சுடரோன் செங்கதிருஞ் சாயுந் தழல்வண்ணன் வீழ்சடையே என்றுரைக்கும் மின். | | 82 |
126. | மின்போலுஞ் செஞ்சடையான் மாலோடும் ஈண்டிசைந்தால் என்போலுங் காண்பார்கட்(கு) என்றிரேல் - தன்போலும் பொற்குன்றும் நீல மணிக்குன்றுந் தாமுடனே நிற்கின்ற போலும் நெடிது. | | 83 |
127. | நெடிதாய பொங்கெரியுந் தண்மதியும்நேரே கடிதாங் கடுஞ்சுடரும் போலும் - நெடிதாக |
இயையும். வீழ் - தொங்குகின்ற. மின் - மின்னல். “சடையே என்று உரைக்கும் மின்” என்றது உருவக அணி. “சடையே” என்னும் தேற்றேகாரம் உண்மை யுவமைப் பொருட்டாய், உருவகத்தோடு இயைந்து வந்தது. ‘சார்ந்தார் இன்பமே பெறுதலால் அவர்க்கு அழகிதாயும், சாராதார் ஒறுத்தலே பெறுதலால் அவர்க்கு அச்சம் தருவதாயும் உள்ளது’ என்க. 126. அ. சொ. பொ.: ‘காண்பார் கட்கு என்போலும்’ எனக் கூட்டுக. என் போலும் - எதைப் போல இருக்கும். “தன்போலும்” என்றது, ‘சிவனைப்போல இருக்கின்ற பொற் குன்று’ என்றபடி. இதனை நீல மணிக்கும் கூட்டி. ‘திரு மாலைப் போல இருக்கின்ற நீல மணிக்குன்று’ என்க. உலக இலக்கியங்களில் உபயோகத்தை மிக உயர்த்துக் கூறுதற்பொருட்டு உபமான உபமேயங்களை நிலை மாற்றிக் கூறுதல் உண்டு. அங்ஙனம் கூறியவழி அஃது, ‘எதிர்நிலை உவமம்’ என்றும், ‘விபரீத உவமை’ என்றும் சொல்லப்படும். அதற்குக் காரணம் உலகப் பொருள்களில் உண்மையில் உயர்ந்து நிற்பது உவமையே. அதனை, “உயர்ந்ததன் மேற்றே உள்ளுங்காலை”1 என்னும் தொல்காப்பியத்தாலும் அறியலாம். இறையிலக்கியத்தில் அவ்வாறு கூறல் வேண்டா. ஏனெனில் இறையிலக்கியத்தில் உபமேயமாகிய இறையே உண்மையில் உயர்ந்து நிற்பது. எனினும் இலக்கண மரபு பற்றி அங்ஙனம் கூறுதல் கூடும். ‘பொற்குன்றும் நீல மணிக் குன்றும் உவமமாக வேறிடத்து வைத்துக் கருதப்படாது, அவையே பொருளாகக் காட்சியில் முன்னிலையில் வைத்து உணரப்படும்’ என, அரியர்த்த உருவத்தைச் சிறப்பித்தவாறு, உடன் - ஒருசேர. ‘இரு பாதியாக’ என்றபடி. நிற்கின்ற - நிற்கின்றன. நெடிது - நெடுங் காலம். ‘எல்லையில் காலம்’ என்பதாம். 127. அ. சொ. பொ.: “கொடிதாக” என்பது முதலாகத் தொடங்கி யுரைக்குங்கால், ‘வெந்தீ - இயற்கையிலே வெப்பம் உடையதாகிய தீ, மேலும் கொடிதாகி எரிக்க, அதனில்’ என உரைக்க. விண்டார்கள்
1. தொல். பொருள் - உவம இயல்.
|