பக்கம் எண் :

71அற்புதத் திருவந்தாதி

விண்டார்கள் மும்மதிலும் வெந்தீ யினிலழியக்
கண்டாலும் முக்கணாங் கண். 

84

128.

கண்ணாரக் கண்டுமென் கையாரக் கூப்பியும்
எண்ணார எண்ணத்தால் எண்ணியும் - விண்ணோன்
எரியாடி என்றென்றும் இன்புறுவன் கொல்லோ!
பெரியானைக் காணப் பெறின். 

85

129.

பெறினும் பிறிதியாதும் வேண்டேம் எமக்(கு)ஈ(து)
உறினும் உறாதொழியு மேனுஞ் - சிறிதுணர்த்தி
மற்றொருகண் நெற்றிமேல் வைத்தான்றன் பேயாய
நற்கணத்தில் ஒன்றாய நாம். 

86


பகையாகியவர்கள்; அசுரர். ‘ஆறும் கண்’ என இயைக்க. ஆறுதல் - மகிழ்தல். காட்சியால் உள்ளம் மகிழ்தலை, “கண்களிப்பக் கண்டார்கள்” என்றது போல1 ‘கண் களித்தது’ என்றல் வழக்கு. ‘மூன்றாகிய கண்’ என்றற்பாலதனை, “முக்கண் ஆம் கண்” என்றார். எனவே, முன் உள்ள” கண்”, என்பது ‘பொருள்’ எனப் பொதுமையில் நின்றதாம். ‘முக்கணான் கண்’ எனப்பாடம் ஓதி. ‘சிவனது கண்கள்’ என உரைத்தல் சிறக்கும். “நெடிது” என்பதற்கு, முன்னை வெண்பாவில் உரைத்தவாறே உரைக்க. பொங்கு எரி - எரிகின்ற நெருப்பு. நேரே போலும் - ஒப்பனவேபோலும். கடிது - மிக்கது. “கடுஞ் சுடர்” என்பதில் கடுமை வெம்மை குறித்தது. வெஞ்சுடர், ஞாயிறு. “போலும்” என்பது உரையசை, ‘மங்கலம் என்பது ஓர் ஊர் உண்டுபோலும்’ என்றல் போல, உவமம் அன்று. ‘சிவனது’ மூன்று கண்களே முச்சுடர்கள்’ என உணர்த்தியவாறு.

128. அ. சொ. பொ.: ஈற்றடியை முதலில் வைத்து உரைக்க. பெரியான் - மகாதேவன்; சிவன் ‘அவனை’ எனச் சுட்டுப் பெயர் வருவிக்க. ஆர - நிரம்ப. எண், எண்ணம் - அதனைச் செய்வதாகிய “என்” என்பது தாப்பிசையாய் முன்னும் சென்று இயைந்தது. என்று என்றும் - என்று என்றும் சொல்லியும். கொல், அசை, ஓகாரம், ஐயப்பொருட்டு பேரவாக் காரணமாக இங்ஙனம் ஐயுற்றவாறு. “காணப்பெறின்” என்பது, காணப் பெறலின் அருமை குறித்து நின்றது.

129. அ. சொ. பொ.: ‘மற்றொரு கண் நெற்றிமேல் சிறது உணர்த்திவைத்தான்றன் பேய் நற்கணத்தில் ஒன்றாய நாம், (இஃது) உறினும், உறாதொழியுமேனும் பிறிதுயாதும் பெறினும் வேண்டேம்’ என இயைத்து முடிக்க. நெற்றிக் கண்ணைச் சிறிது உணர்த்தலாவது, ‘உளது’ என்னும் அளவிலே காட்டுதல். நன்கு திறப்பின் உலகம்


1. பெரிய புராணம் - திருஞான சம்பந்தர் - 728.