பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை72

130.

நாமாலை சூடியும் நம்ஈசன் பொன்னடிக்கே
பூமாலை கொண்டு புனைந்தன்பாய் - நாமோர்


வெந்தொழியும். கணம் - படை. “நற்கணம்” என்றமையால், சிவகணமாகிய பேய்கள் பாவப் பிறவியாகிய பேய்களாகாமை விளங்கும். ஞானிகளை உலகம் அவர்களது புறக்கோலம் பற்றி, பித்தராக நினைப்பினும் அவர் பித்தராகாமை போல்வதே இது. ஊழி முடிவில் உடம்பின்றிச் சிறிதே உணர்வு மாத்திரமாய் இருக்கும் உயிர்களே சிவப் படைகளாகக் கூறப்படுதலின் உண்மை. எனவே, பௌதிக உடம்பு நீங்கிச் சிவனைச் சார்ந்திருக்கும் உயிர்களும் அவையாகவே விளங்கும் என்க. அம்மையார் மேற்காட்டிய திருப்பதிகங்களிலும் இவ்வந்தாதியின் இறுதியிலும் தம்மை, “காரைக்காற் பேய்” எனக் குறித்தமையால், அவர் அந்நிலையராகியே இறைவனைச் சார்ந்தமை தெளிவு. அதனால் நம்பியாரூரர் இவரது வரலாற்றை, “பேயார்” என்ற ஒரு சொல்லில் அடக்கி அருளிச் செய்தார் சேக்கிழார்.

மெய்யில் ஊனுடை வனப்பை யெல்லாம்

உதறி, எற்புடம்பே யாகி,

வானமும், மண்ணும் எல்லாம்

வணங்குபேய் வடிவ மானார்.1

என விரித்தும், 

பொற்புடைச் செய்ய பாத
புண்டரீ கங்கள் போற்றும்
நற்கணத் தினில்ஒன் றானேன்
நான்என்று நயந்து பாடி.2

என மேற்கோட்டியும் அருளிச் செய்தார். இவ்விடத்திலும் அம்மையார் பெற்ற பேய் வடிவம் “வானமும் மண்ணும் எல்லாம் வணங்கு பேய் வடிவம்” எனப்பட்டமை நோக்கத் தக்கது. இத்தகைய நற்பேறு கிடைக்கப் பெற்ற பெருமிதம் பற்றி அம்மையார் தம்மை “நாம்” என்றும், “வேண்டேம்” என்றும், “எமக்கு” என்றும் பன்மைச் சொல்லாற் குறித்தருளினார். ‘பிற பேறு களோடு தமக்கு இயைபில்லாமையால் அவை தம்மைக், கிட்டப் போவதில்லை’ என்பது தோன்ற, “பெறினும்” என எதிர்மறை உம்மை கொடுத்துக் கூறினார். ‘பிற பேறுகள் எல்லாம் இதன் முன் எம்மாத்திரம்’ என்பது கருத்து. உறுதல் நன்மை பயத்தல். 

130. அ. சொ. பொ.: நா மாலை - நாவால் தொடுக்கப் படும் மாலை; சொன் மாலை; பா மாலை. “நம் ஈசன் பொன் அடிக்கே”


1. திருமுறை - 7 - 39.4

2. பெரிய புராணம் - காரைக்கால் அம்மையார் - 50, 52.