| அறிவினையே பற்றினால் எற்றே தடுமே எறிவினையே என்னும் இருள். | | 87 |
131. | இருளின் உருவென்கோ! மாமேகம் என்கோ மருளின் மணிநீலம் என்கோ! - அருளெமக்கு நன்றுடையாய் செஞ்சடைமேல் நக்கிலங்கு வெண்மதியம் ஒன்றுடையாய் கண்டத் தொளி. | | 88 |
132. | ஒளிவிலி வன்மதனை ஒண்பொடியா நோக்கித் தெளிவுள்ள சிந்தையினிற் சேர்வாய் - ஒளிநஞ்சம் உண்டவாய் அஃதிருப்ப உன்னுடைய கண்டமிருள் கொண்டவா(று) என்இதனைக் கூறு. | | 89 |
என்பதை முதலிற் கொள்க. “கொண்டு” என்பது ‘ஆல்’ உருபின் பொருட்டாய இடைச்சொல். புனைந்து - அலங்கரித்து, ஓர் அறிவு, ‘அவனே நமக்கு எல்லாப் பொருளும், பிறி தொன்றும் பொருளாவதில்லை’ என அறியும் அந்த ஒருமை அறிவு. ‘ஏ தாய், அற்றாய் அடும்’ என்க. ஏது, ‘யாது’ என்பதன் மரூஉ. எற்று - என்ன தன்மைத்து. அடும் - வருத்தும், எறி - தாக்குகின்ற “வினையே” என்னும் ஏகாரம், அசை. “வினை யென்னும் இருள்” என்றது உருவகம். இருள் - துன்பம். துன்பம் தருவதனைத் “துன்பம்” என்றது உபசாரம். பற்றினால், இருள், ஏதாய், ஏற்றாய் அடும்? என முடிக்க. ‘வினாக்கள், யாதாயும், எற்றாயும் அடாது’ என்னும் எதிர் மறைப் பொருள் குறித்து நின்றன. ‘சிவனுக்குப் பணி செய்து நிற்பாரை வினை அணுகமாட்டாது’ என்றபடி. 131. அ. சொ. பொ.: “நன்றுடையாய்” என்பது முதலாகத் தொடங்கி, ‘உன்னுடைய கண்டத்து ஒளியை யான் என் என்கோ! எமக்கு அருள்’ என முடிக்க, ‘எமக்கு அருள்’ என்பது வேறு தொடராதலின், ஒருமைப் பன்மை மயக்கம் அண்மை உணர்க. என்கோ - என்பேனோ. ஓகாரங்கள் - ஐயப் பொருள வாயினும், ‘எவ்வாறு கூறினும் பொருந்தும்’ என்பதே மா - கருமை. மருள் - மருட்கை; வியப்பு. ‘வியப்பைத் தரும் மணி’ என்க. இதில் சாரியை நிற்க இரண்டன் உருபு தொக்கது, பெயர்த் தொகை யாகலின். அருள் - சொல்லியருள். நன்று உடையாய் நன்று ஒன்றையே உடையவனே. “நன்றுடை யானைத் தீயதில்லானை”1 என அருளிச் செய்தமை காண்க. நக்கு இலங்குதல் - ஒளிவிட்டு விளங்குதல். 132. அ. சொ. பொ.: ஒளி வில் - அழகையுடைய வில்; கரும்பு வில். வில்லி - வில்லையுடையவன். இஃது இடைக் குறைந்து நின்றது.
1. திருமுறை - 1.98.1
|