915. | பெயரா நலத்தொழில் ஏகம்ப னார்பிறை தோய்கயிலைப் பெயரா திருக்கப் பெறுகிளி காள்புன மேபிரிவின் துயரால் வருந்தி மனமுமிங் கோடித் தொழுதுசென்ற(து) அயரா துரையும்வெற் பற்(கு)அடி யேற்கும் விடைதம்மினே. | | 24 |
என்பது வேங்கை மரத்திற்கும், சோதிடனுக்கும் பெயர் ஆதலால், "கணியார்" என்றது சிலேடை. பூசுகை ஆர் - பூசுதலைப் பொருந்திய. தேசு - அழகு. கை ஆர் - கையில் பொருந்திய. சிலை - வில் 'தேசு சிலை, கை ஆர் சிலை' எனத் தனித் தனி இயைக்க. வெற்பர் பிரியும் பரிசு இலர் - தலைவர் இது பொழுது இவ்விடம் விட்டும் பிரிந்து போகும் தன்மையை உடையர் அல்லர் (ஆகையால் வேங்கை மரங்களே! நீங்கள், 'தலைவர் பிரிவார்' எனச் சோதிடம் கூறுவதால், உம்மைப் பித்தர்கள்தாம் சிறந்த சோதிடர் என்று கூறுவார்கள்; நாங்கள் அவ்வாறு கூறமாட்டோம். ஆயின் 'உண்மை யாது' எனில்) 'கொலை செய்யக் கூசுதல் 'சிறிதும் இல்லாத, நன்மையைக் குலைக்கின்ற வேங்கைகள் (புலிகள்) என்பதே உங்கள் பெயர். அத்தன்மையை யுடைய உங்களை, 'வருவதறிந்து கூறும் சோதிடர்' என்று யாவர் சொல்வார்! வேங்கை மரம் பூக்கும் காலத்தில் தினைகளும் அறுவடை செய்யும் காலத்தை அடையும். அதனால் வேங்கைகள் பூத்தால் தினைப் புனங் காக்கத் தினைப் புனங்களில் பரண் அமைத்துத் தங்கியிருந்த மகளிரும் ஊருக்குள் உள்ள தங்கள் இல்லத்தை அடைந்து விடுவர். ஆகவே, வேங்கைகள் பூத்தால் களவொழுக்கத்தில் ஒழுகுவோர் கவலை யடைவர், மகளிர் தலைவனுக்குத் தாங்கள் தினைப்புனத்தை விட்டு இல்லம் சென்றுவிடுவதாக அறிவித்து, விரைவில் தலைவியை வரைந்துகொள்ள வற்புறுத்துவர். அவ்வாறு வற்புறுத்துதல் 'வரைவு கடாதல்' - எனப்படும். அங்ஙனம் தலைவனை வரைவு கடவா எண்ணிய தோழி தலைவன் கேட்கும் படி வேங்கை மரங்களை நோக்கி ஏதோ கூறுபவள் போல இவ்வாறு நகை யுண்டாகக் கூறி வரைவு கடாயினாள். வேங்கைகள் காலம் அல்லாக் காலத்தில் பூத்ததுபோலக் கூறித் தினை முதிர்வுரைத்து வரைவு கடாயினாள்1 'வேங்கை' என்னும் பெயருடைய உங்களைப் பித்தர்கள், 'கணியார்' என்றுபேசட்டும்; நாங்கள் அவ்வாறு பேசோம் - என்றாள். 915.குறிப்புரை: பெயரா நலத்து எழில் - என்றும் மாறா திருக்கும் அழகினால் உண்டாகும் எழுச்சி, ஏகம்பனார் காலத்தைக் கடந்தவர் ஆதலின் அவரது நலம் என்னும் பெயரா நலமாம். 'கயிலையினின்றும், தினையை அறுத்த பின்னும் அதன் தாள்களில் தங்கிப் பெயராதிருக்கப் பெறுகின்ற கிளிகளே! யான் பிரிவினால் வருந்திச் சென்றதைப் பின்பு இங்குவரும் வெற்பற்கு (தலைவற்கு)
1. திருக்கோவையார் - 138.
|