பக்கம் எண் :

683திருஏகம்பமுடையார் திருவந்தாதி

916.தம்மைப் பிறவிக் கடல்கடப் பிப்பவர் தாம்வணங்கும்
மும்மைத் திருக்கண் முகத்தெழில் ஏகம்பர் மொய்கயிலை
அம்மைக் கருங்கண்ணி தன்னொடின் பந்தருந் தண்புனமே
எம்மைக் கவலை செயச்சொல்லி யோவல்லி எய்தியதே.

25

917.இயங்குந் திரிபுரம் எய்தவே கம்பர் எழிற்கயிலைத்
தயங்கும் மலர்ப்பொழில் காள்தையல் ஆடரு வித்தடங்காள்

அயராது (மறவாமல்) உரையுங்கள்; அடியேனுக்கும் விடை தாருங்கள்' என்று, தலைவன் சிறைப்புறமாகத் தோழி பிரிவருமை கூறி வரைவு கடாயினாள்1 புனமே பிரிவின் துயர் - இப்புனத்தையே அடியோடு பிரிதலால் வரும் துன்பம். "மனமும்" என்னும் உம்மை உயர்வு சிறப்பு. இங்கு உலாவிக்கொண்டே. "ஓடி" எனச் சினைவினை முதல்மேல் நின்றது. தொழுது. மீட்டும் கூட்டு விக்க வேண்டித் தெய்வத்தைத் தொழுது. தன்னின் வேறாகாமை பற்றித் தலைவியைத் தோழி "அடியேன்" எனத் தான் என்றே கூறினாள்.

916. குறிப்புரை: 'தம்மைத் தாம் பிறவிக் கடல் கடப்பித்துக் கொள்ள விரும்புபவர் வணங்கும் ஏகம்பர்' என்க. எனவே, 'ஒருவர் தம்மைத் தாம் பிறவிக் கடலினின்றும் கடப்பித்துக் கொள்ளுதற்கு ஏகம்பரை வணங்குதல் தவிர வேறு வழியில்லை' என்பது பெறப்பட்டது. "மும்மை" என்றது, 'மூன்று' என்றே பொருள் தந்தது. 'கயிலையில் இன்பந்தரும் புனம்' ஏழாவதன் தொகையாகக் கொள்க. 'அ' என்னும் சுட்டுக் கருங்கண்ணியைச் சுட்டிற்று. மை, கண்ணிற்கு அடை கருங்கண்ணி, தலைவி. தன், சாரியை, 'கருங்கண்ணியோடு சேர்ந்திருந்து முன்பெல்லாம் இன்பத்தைத் தந்து கொண்டிருந்த தண்புனமே' எனத் தலைவன் தினைப் புனத்தை விளித்துக் கூறினான். வல்லி எய்தியது - கொடிபோலும் தலைவி உன்பால் வந்தது. எம்மைக் கவலை செயச் சொல்லியோ - (முதலில் இன்பத்தைத் தந்து பின்பு) எம்மைக் கவலைப்படுத்தச் சொல்லித்தானே? 'அவ்வாறு இருத்தல் இயலாது; எம் வினைதான் இவ்வாறு ஆயிற்றுப்போலும்' என்பது குறிப்பெச்சம். இது தினை அறுக்கப்பட்டபின் அப்புனத்திற்குச் சென்ற தலைவன் அங்குத் தலைவி முதலானோர் இல்லாமல் புனம் வெறிச் சோடிக் கிடத்தலைப் பார்த்து வருந்திக் கூறியது. 'வறும்புனங் கண்டு வருந்தல்' - என்னும் துறை2 'வறுங்களம் நாடி மறுகல்' எனவும் கூறுவர்.

917. குறிப்புரை: இயங்கும் - வானத்தில் திரிகின்ற, திரிபுரம் - மூன்று கோட்டைகள். தயங்கும் - விளங்குகின்ற. (கயிலை கண் தயங்கும்' என்க. 'தட அருவிகாள்' என மாற்றிக் கொள்க. தட -


1. திருக்கோவையார் - 144.
2. திருக்கோவையார் - 146.