பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை712

977.உலவிய மின்வடம் வீசி உருமதிர் வுள்முழங்கி
வலவிய மாமதம் பாய்முகில் யானைகள் வானில்வந்தால்
கலவிய வார்குழல் பின்னரென் பாரிர் எனநினைந்து
நிலவிய ஏகம்பர் கோயிற் கொடியன்ன நீர்மையனே.

86

978.நீரென்னி லும்அழுங் கண்முகில் காள்நெஞ்சம் அஞ்சலையென்(று)
ஆரென்னி லுந்தம ராயுரைப் பார்அம ராவதிக்கு
நேரென்னி லுந்தகும் கச்சியுள் ஏகம்பர் நீள்மதில்வாய்ச்
சேரென்னி லுந்தங்கும் வாட்கண்ணி தானன்பர் தேர்வரவே.

87

979.வரங்கொண் டிமையோர் நலங்கொள்ளும் ஏகம்பர் கச்சியன்னாய்
பரங்கொங்கை தூவன்மின் நீர்முத்தம் அன்பர்தம் தேரின்முன்னே

977. குறிப்புரை: இப்பாட்டு வேந்தற்கு உற்றுழிப் பிரிந்த தலைவன் கார் கண்டு தன்னுட் கூறியது. 'முகிலாகிய மத யானைகள் இடியாகிய பிளிறுதலைச் செய்து, மின்னலாகிய பாசத்தை அறுத்துத் தள்ளி, வானமாகிய களத்தில் வருமாயின், பின்னர்த் தலைவி என்னாவாள்' என்பதை நினைத்துப் பார்மின் - எனத் தோழி கூறியதை நினைந்து, ஏகம்பர் கோயில் வாசலில் உள்ள கொடி அலைவதுபோல மனம் அலமலரும் நீர்மையை யுடையனானேன் யான் என இயைத்து முடிக்க. வானத்தைக் 'களம்' என்னாமை ஏகதேச உருவகம். முகில்களைப் போர்களத்து யானைகள் போல்வனவாகக் கண்டு தலைவி இறந்துபடும் நிலைமையை அடைவாள் என்பதாம். "வலவிய யானைகள்" என இயையும். வார் குழல் - நீண்ட கூந்தலை யுடையவள். "யானை" என வருதலின் முழங்குதல் பிளிறு தலாயிற்று.

978. குறிப்புரை: இது கார்ப் பருவம் கண்டு ஆற்றாளாய தலைமகளை, 'தலைவனது தேர் இனி வருதல் தப்பாது' எனக் கூறி வற்புறுத்தும் தோழி அதனை முகில்கள் முன்னிலையாகக் கூறியது. '(நீவிர் பெய்வது மழையேயாயினும்) தலைவியது அழும் கண்கள் போலும் முகில்கள்! - கச்சியுள் ஏகம்பர்' நீள் மதில் வாய்ச்சேர் - (சேர்ந்திருப்பன) என்னிலும் தகுவனவாகிய வாள்போலும் கண்களையுடைய இவள், - நெஞ்சம் அஞ்சலை - என்று அன்பர் தேர்வரவு உரைப்பார் ஆர் என்னிலும் - தமர் - (என்பாள் - என இயைத்து, 'ஆதலின், நீவிர் அதனைக் கூறுவீர்' என்னும் குறிப்பெச்சம் வருவித்து முடிக்க. அமராவதி - இந்திரன் நகர்.

979. குறிப்புரை: இது, தோழி பருவங் காட்டித் தலைவியை வற்புறுத்தது. "கச்சி அன்னாய்" என்றது தோழி தலைவியை