| தரங்கொண்டு பூக்கொண்டு கொன்றைபொன் னாகத்தண் காந்தட்கொத்தின் கரங்கொண்டு பொற்சுண்ணம் ஏந்தவும் போந்தன கார்முகிலே. | | 88 |
980. | கார்முகம் ஆரவண் கைக்கொண்ட கம்பர் கழல்தொழுது போர்முக மாப்பகை வெல்லச்சென் றார்நினை யார்புணரி நீர்முக மாக இருண்டு சுரந்தது நேரிழைநாம் ஆர்முக மாக வினைக்கடல் நீந்தும் அயர்வுயிர்ப்பே. | | 89 |
981. | உயிரா யினவன்பர் தேர்வரக் கேட்டுமுன் வாட்டமுற்ற பயிரார் புயல்பெற்ற தென்னநம் பல்வளை பான்மைகளாம் தயிரார்பால் நெய்யொடும் ஆடிய ஏகம்பர் தம்மருள்போல் கையிரா வளையழுந் தக்கச் சிறுத்தனம் கார்மயிலே. | | 90 |
விளித்தது. "பரங் கொங்கை தூவல்" என்பதை இறுதியில் வைத்து, 'கார் முகில், நீராகிய முத்தினைத் தாரமாகக் கொண்டு, கொன்றை மரம் பூக்களைக் கொண்டு பொன்னாய் நிற்க, காந்தட் பூவின் கொத்தாகிய கைகளில் அன்பர் தேரின்முன் பொற்சுண்ணம் ஏந்த வேண்டிப் போந்தன. ஆகவே, நீ நின் கொங்கைகளைப் பரமாக (சுமையாக)ச் சுமக்க வேண்டா' என முடிக்க. 'பரமாக தரமாக' என ஆக்கம் வருவிக்க. தூவல் - தாங்கற்க; சுமவற்க. 'மின்னலின்கண் நீர்' என ஏழாவது விரிக்க. "ஏந்தவும்" என்னும் உம்மை சிறப்பு. 'கார் முகில் போந்தன; கொங்கை சுமவல் எனப் பருவங் காட்டி வற்புறுத்தினாள். 'சுமவல்' என்றது 'தனிமை காரணமாகச் சுமையாக எண்ண வேண்டா' என்றபடி. இயற்கையாய் வந்த கார்ப் பருவத்தை அன்பர் தேரின்முன் சென்று வரவேற்க வந்ததாகக் கூறியது தற்குறிப்பேற்ற அணி. 980. குறிப்புரை: இது, பகைவயிற் பிரிவின்கண் தலைமகள் கார்ப் பருவம் கண்டு ஆற்றாது தோழியொடு புலம்பியது. "நேரிழை" என்றது தலைவி தோழியை விளித்தது; அதனை முதலிற் கொள்க. கார்முகம் - வில். 'கை ஆரக் கொண்டு' என்க. சென்றார் - சென்ற தலைவர். 'நம்மை நினையார்' என்க. புணரி -கடல். 'அது மேகமாகி இருண்டு சுரந்தது' என்க. நீர் முகமாக - யார் ஆற்றுவிப்பாராய் நிற்க. வினை - தீவினையின் விளைவு; ஆகுபெயர். அயர்வுயிர்பு - இளைப்பாறுதல். 'வினைக் கடலை நீந்துதலாகிய அயர்வுயர்ப்பை ஆர்முகமாகப் பெறுவோம்' என ஒரு சொல் வருவித்து முடிக்க. 981. குறிப்புரை: இது வரைவொடு வந்த தலைமகனது தேர்வரவு கேட்டுத் தலைவி மகிழ்ந்த மகிழ்ச்சியைத் தோழி செவிலிக்கு
|