பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை714

982.கார்விடை வண்ணத்தன் அன்றேழ் தழுவினும் இன்றுதனிப்
போர்விடை பெற்றெதிர் மாண்டார் எனவண்டர் போதவிட்டார்
தார்விடை ஏகம்பர் கச்சிப் புறவிடைத் தம்பொன்நன்பூண்
மார்விடை வைகல் பெறுவார் தழுவ மழவிடையே.

91

983.விடைபாய் கொடுமையெண் ணாதுமே லாங்கன்னி வேல்கருங்கண்
கடைபாய் மனத்திளங் காளையர் புல்கொலி கம்பர்கச்சி

உணர்த்தியது. புயல் - மேகம். இஃது ஆகுபெயராய் மழையைக் குறித்தது. பல் வளை - பலவாகிய வளையலை யணிந்த தலைவி. 'பல் வளைக்கு' என்னும் நான்கன் உருபு தொகுக்கப்பட்டது. 'தயிரையும், பாலையும நெய்யோடு ஆடிய ஏகம்பர்' என்க. 'நம் பல் வளைக்கு முன்பு கையில் இராது கழன்ற வளையல்கள் அழுத்தமாகிவிடத் தனங்கள் கச்சினை இறப் பண்ணும், பான்மைகள் ஏகம்பர் அருள்போல் கார் மயில் ஆம்' என இயைத்து முடிக்க. 'இறுக்கும்' என்பதில் சாரியை தொகுக்கப்பட்டு "இறும்" என நின்றது. "அருள்" என்பது ஆகுபெயராகப் அதன் பயனைக் குறிக்க, கார் மயில் பண்பு பற்றிய உவமையாய் நிற்றலின் அவை தம்முள் வேறாதல் அறிக.

982. குறிப்புரை: இது, முல்லை, நிலத்துக் கைக்கிளை யாகிய 'ஏறு தழுவிக் கோடல்' என்னும் ஆசுர மணத்தில் தழுவவிடப்பட்ட ஏற்றினைக் கண்டோர் கூறியது. 'அன்று கார் வண்ணத்தின் விடை ஏழ் தழுவினும், இன்று அண்டர் தனி விடை ஏகம்பர் கச்சிப் புறவிடை போதவிட்டார்; போர் விடை பெற்று எதிர் (சென்று) மாண்டார் என அம் மழவிடையை (எவரேனும்) தழுவினால் (அவர்) அண்டரது பொன்னின் பூண் மார்பிடை வைகப் பெறுவார்' என இயைத்து. 'கண்ணன் ஏழு ஏறுகளைத் தழுவிக் கொன்றே ஆயர்மகளாகிய நப்பின்னையை மணந்தான்' என்பது புராணம். அண்டர் - ஆயர். தனி - ஒற்றை. புறவு - முல்லை நிலம். போத விட்டார் - வர விட்டார். போர், இங்கு ஏறுதழுவல், விடை - அதற்கு ஆயர்தரும் ஆணை; தார் விடை - மணி யணிந்த இடபம். தம் பொன் - ஆயர்களுக்கு மகளாகிய இலக்குமிபோல்பவள். மார்வு - அவளது மார்பு. வைகல் - தங்குதல்.

983. குறிப்புரை: இதுவும் முன்பாட்டின் துறையதே. விடை - ஆயர் வரவிட்ட ஏறு. அது தன் கொம்பால் தம் மார்பிற் பாய இருக்கின்ற கொடுமையை நினையாமல், மேலான ஆயர் கன்னியது வேல்போலும் கரிய கண்ணின் கடை பாய்கின்ற மனத்தினையுடைய காளையர் இனம், முல்லை நிலத்தின் பதியில் (ஊரில்) உள்ள