| மடைபாய் வயலிள முல்லையின் மான்கன்றொ டான்கன்றினம் கடைபாய் தொறும்பதி மன்றில் கடல்போற் கலந்தெழுமே. | | 92 |
984. | எழுமலர்த் தண்பொழில் ஏகம்பர் கச்சி இருங்கடல்வாய்க் கொழுமணப் புன்னைத் துணர்மணற் குன்றில் பரதர்கொம்பே செழுமலர் சேலல்ல வாளல்ல வேலல்ல நீலமல்ல முழுமலர்க் கூரம்பின் ஓரிரண் டாலு முகத்தனவே. | | 93 |
985. | முகம்பாகம் பண்டமும் பாகமென் றோதிய மூதுரையை உகம்பார்த் திரேலென் நலமுயர் ஏகம்பர் கச்சிமுன்நீர் அகம்பாக ஆர்வின் அளவில்லை என்னின் பவளச்செவ்வாய் நகம்பால் பொழில்பெற்ற நாமுற்ற வர்கொள்க நன்மயலே. | | 94 |
மன்றின்கண் கடல் போற் கலந்து எழும்' என்க. புல் - புலி. கொலி - கொல்லி; கொன்றவன்; பன்மை யொருமை மயக்கம். கச்சி முல்லை - அடையடுத்த ஆகுபெயர். முல்லைக் கொடி வளரும் பாத்தியை "வயல்" என்றார். கடைதொறும் பாய் - வாயில்கள் தோறும் துள்ளு கின்ற. 'காளையர் இனம்' என மாற்றிக் கொள்க. 984. குறிப்புரை: இது நெய்தல் நிலத்துக் களவியலில் தலைவன் இயற்பைப் புணர்ச்சிப்பின் தலைவியைப் புகழ்ந்தது. இது 'நலம்புனைந் துரைத்தல்' எனப்படும். துணர் - பூங்கொத்துக்களையுடைய. 'மணற்குன்றில் நிற்கும் பரதர் கொம்பே' என்க. பரதர் - வலைஞர். 'உன் முகத்தன சேல் முதலியன அல்ல; இரண்டு அம்புபோல ஆலும்,' (பிறழும்) என்க. ஆவதாக உணர்ந்தன்றி 'அன்று' என்றல் கூடாமையின், 'சேல் முதலியன அல்ல' என்றானாயினும் இது கண்ணுக்கு அவன் சொல்லிய பலபொரு ளுவமையேயாம். "செழுமலர்" என்பதில் மலர் தாமரை மலர். 'செழுமலரின்கண் பிறழும் சேல்' என்க. "முழுமலர்" என்பதில் மலர், மன்மதன் அம்பு. 985. குறிப்புரை: இது, காட்சியின் பின் தலைவியை ஐயுற்று, மானுடமகளே எனத் துணிந்த தலைவியது குறிப்பை உணர்கின்றுழிக் கூறியது. "உயர் ஏகம்பர் கச்சி முன்னீர்" என்பதை முதலிற் கொள்க. கச்சி முன்னீர் - கச்சிப் புறத்தில் நிற்கின்றவரே. தலைவியைத் தலைவன் இங்ஙனம் முன்னிலைப் படுத்தினானாயினும் அவள் கேட்ப இங்ஙனம் கூறாது தன்னுள்ளே இங்ஙனம் கூறினான். பாகம் - பாதி. "முகம் பாதி; பண்டம் பாதி"....1 என்பது ஒரு பழமொழி - என்பது இப்பாட்டால் அறியப்படுகின்றது. 'ஒருவருக்கு ஒன்றைக்
1. திருக்குறள் - 90 - பரிமேலழகர் உரை.
|