பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை716

986.மயக்கத்த நல்லிருள் கொல்லும் சுறவோ டெறிமகரம்
இயக்கத் திடுசுழி ஓதம் கழிகிளர் அக்கழிதார்

கொடுத்து உதவும் உதவி கொடுப்பவரது முகத்தாற் பாதியும், கொடுக்கப்படும் பொருளாற் பாதியுமாக முழுமை பெறுகின்றது' என்பது இதன் பொருளாகும். முகமாவது, தம்பால் வருபவரைத் தொலைவிற் கண்டபொழுதே இன்முகங் காட்டி வரவேற்றல். பண்டமாவது, அவர் பின் அணுகியவழி அவர் விரும்பும் பொருளை நல்லனவாகக் கொடுத்தல். இன்சொல் முகத்திலே அடங்கிற்று "சேய்மைக்கண் கண்டுழி இன்முகமும், அது பற்றி நண்ணியவழி இன்சொல்லும் அது பற்றி உடன்பட்ட வழி நன்றாற்றலும் என, விருந்தோம்புவார்க்கு இன்றியமையாதன மூன்று"1 என்னும் பரிமேலழகர் உரையாலும் அம்மூன்றனுள் ஒன்று இவ்வழியும் உதவி முழுமை யடையாமை விளங்கும். ஆகவே, 'பொழிலின் கண் பவளச் செவ்லாயைப் பெற்ற நாம் உற்றவர் (நம்மால் உறப்பட்டவர் - விரும்பப்பட்டவர்; தலைவி) தம் உள்ளத்திலும் நம் போலக் காமத்தை உடையராதல் வேண்டும்' என்றான். பவளச் செவ்வாயைப் பெற்றமையாவது, "நோக்கினாள் நோக்கெதிர் நோக்கப் பெற்றது2 அந்நோக்கு அன்பை மட்டுமே வெளிப்படுத்தியல்லது காமக் குறப்பினை வெளிப்படுத் தாமையின், "நாம் உற்றவர் நன் மயல் கொள்க" என்றான், "கொள்க" என்பது, வேண்டுதற் பொருட்டு, "வினைகலந்து வென்றீக மன்னன்"3 என்பதில், "வென்றீக" என்பது போல. "உற்றவர்" என்பது தன்னுட் சொல்லிய சொல்லிடத்து என முன்னிலைக்கண் படர்க்கை மயங்கிற்று. மூதுரை - பழமொழி. உகம் - ஊழி, இது புனைந்துரை வகையால் காலத்தின் நெடுமையைக் குறித்தது. 'மூதுரையை நெடுங்காலமாக உணர்ந்தீராயினும் அதனால் பயன் என் என்பான். "மூதுரையை உகம் பார்த்திரேல் நலம் என்" என்றான். 'பார்த்திரேனும்' என்னும் உம்மை தொகுத்தலாயிற்று. அகம் பாக ஆர்வு - முகம்போல் அகத்தின் பாகமாகிய நிறைவு. நிறைவு - காம நிறைவு. அளவு இல்லை - அதன் அளவு வரையறைப் படவில்லை. 'முகத்தால் இயைந்த இவர் அகத்தாலும் இயைதல் வேண்டும்' என்றபடி. 'அகத்தால் இயைந்தமை - கண்ணொடு கண் இணை நோக்கு ஒக்கின் -4 அறியப்படும், அதனை யான் இன்னும் பெற்றிலேன்' என்பதாம். நகம் - மலை 'நகப்பால்' என்பது மெலிந்து நின்றது.

986. குறிப்புரை: இது, 'களவு நீக்கி வரைதல் வேண்டும்' எனக் கூறுந்தோழி அதனைக் கூறாமல் இரவுக் குறி விலக்கியது. தலைவன்


1. திருக்குறள் - 90.
2. திருக்குறள் - 1082.
3. திருக்குறள் - 1268.
4. திருக்குறள் - 1100.