| துயக்கத் தவர்க்கரு ளாக்கம்பர் கச்சிக் கடலபொன்உன் முயக்கத் தகல்வு பொறாள்கொண்க நீர்வரும் ஊர்க்கஞ்சுமே. | | 95 |
987. | மேயிரை வைகுஅக் குருகுண ராமது உண்டுபுன்னை மீயரை வண்டோ தமர்பு கடிய விரிகடல்வாய்ப் பாயிரை நாகம்கொண் டோன்தொழும் கம்பர்கச் சிப்பவ்வநீர் தூயிரை கானல்மற் றாரறி வார்நந் துறைவர்பொய்யே. | | 96 |
இரவுக் குறி நீக்கிப் பகற் குறி வேண்டுவானாயின் அதனையும் எவையேனும் சொல்லித்தோழி விலக்குவாள். கொண்கன் - நெய்தல் நிலத் தலைவன், கொண்க! கடல் பொன் உன் முயக்கத்து அகல்பு பொருள்; (ஆயினும்) நீ இரவில் வரும் இவ்வூர்க்கு (இவ்வூரின் இயல்பிற்கு) அஞ்சும். இவ்வூரின் இயல்பு மயக்கத்த நள்ளிருளில் உப்பங் கழியில் கொல்லும் சுறாவோடு முதலைகள் வெளிப் போதும், இயக்கத்துக் கழி கிளழ் ஒதும் இடு சுழிகள் மிகுதியாம். அக்கழியே முடிவில்லாத நீட்சியது' என இயைத்து முடிக்க. எனவே, 'இரவில் இவண் வருதலை ஒழிக' என்பது குறிப்பெச்சமாம். கடல், ஆகுபெயர் அதன் கரைக்கண் உள்ள பாக்கத்தைக் குறித்தது. அதன்கண் உள்ள பொன், நெய்தல் நிலத் தலைவி. முயக்கத்து அகல்வு - தழுவலின் நீக்கம் - மகரம், இங்கு முதலையைக் குறித்தது. 'சுறாவும் மகரமும் வெளிப்போதும்' என ஒரு சொல் வருவிக்க. இயக்கம் - வழி, துறை. ஓதம் - அலை. "சுழி" என்னும் எழுவாய்க்கு, 'மிகுதி' என்னும் பயனிலை வருவிக்க. தார் மாலையாகலின் அது நீட்சியைக் குறித்தது. தார் உடையதனை, "தார்" என்றல் உபசாரம். துயக்கத்தவர் - அறிவு கலங்கியவர். 987. குறிப்புரை: இது தலைவன் வரைவிடை வைத்துப் பொருள் வயிற் பிரிந்த காலத்துப் பிரிவு நீட்டிப்பத் தலைவி தலைவனைத் தெரியாது தலைவனை இயற் பழித்துக் கூறியது. இது நொதுமலர் வரைவு கேட்டுக் கூறியதுமாம். "தினைத்தா ளன்ன சிறுபசுங் கால" என்னும் குறுந்தொகைப் பாட்டு, "யானுந் தோழியும் ஆயமும் ஆடுந்துறை நண்ணி" என்னும் பழம்பாட்டு முதலியவற்றோடு இதனை ஒப்பிட்டுக் காண்க. இரைமேய் வைகு அக்குருகு உணரா - இரையையே விரும்பி அதன் வரவு பார்த்திருத்தலின் கொக்குகளும் பார்த்திருக்க மாட்டா. புன்னை மீ மது உண்டு (ஒலிக்கின்ற) வண்டுகளோ எனின் அமர்பு கடிய - மதுவிலே படிந்து எழமாட்டா. எனவே, அவைகளும் பார்த்திருத்தற்கில்லை. பாய் இரை கடல் வாய் நாகம் கொண்டோன் - பரந்துபட்டு ஒலிக்கின்ற கடந்து பாம்பளையைக் கொண்டோன்; திருமால், பவ்வம் நீர் தூய் இரை கானல்- கடல் நீரைத்தூவி ஒலிக்கின்ற கரையிடத்து. நம் துறைவர்பொய் மற்று ஆர்அறிவார் - நமது நெய்தல் நிலத்துத்
|