988. | பொய்வரு நெஞ்சினர் வஞ்சனை யாரையும் போகவிடா மெய்வரும் பேரருள் ஏகம்பர் கச்சி விரையினவாய்க் கைவரும் புள்ளொடு சங்கினம் ஆர்ப்பநம் சேர்ப்பர்திண்தேர் அவ்வரு தாமங் களினம்வந் தார்ப்ப அணைகின்றதே. | | 97 |
989. | இன்றுசெய் வோமித னில்திரு ஏகம்பர்க் கெத்தனையும் நன்றுசெய் வோம்பணி நாளையென் றுள்ளிநெஞ் சேயுடலில் சென்றுசெ யாரை விடும்துணை நாளும் விடாதடிமை நின்றுசெய் வாரவர் தங்களின் நீள்நெறி காட்டுவரே. | | 98 |
தலைவர் 'உன்னைப் பிரியேன்' என்று சூளுரைத்து அதனைப் பொய்த்தமைக்குச் சான்று சொல்வார் வேறுயாவர்! "குருகு" எனவும், "புன்னை மீ வண்டு" எனவும், "கானல்" எனவும் கூறினமையால் தலைவன் கூடிப் பிரிந்தது கடற்கரைக் கண்ணே என்பதும், "மற்றுஆர் அறிவார்" என்றதானால், 'கூடியது களவினால்' என்பதும் குறிக்கப்பட்டன. 988. குறிப்புரை: இது, வரைவிடை வைத்துப் பிரிந்த தலைவன் நீட்டிப்புப் பற்றி வருந்திய தலைவிக்குத் தோழி தலைவனது தேர்வரவைக் கூறியது. பொய் வரு நெஞ்சினர் - பொய் சொல்லும் எண்ணம் வருகின்ற நெஞ்சையுடையவர். 'நெஞ்சினரொடு' என்னும் எண்ணொடு தொகுத்தலாயிற்று. உம்மை - இறந்தது தவிய எச்சம். போக விடாமை - தப்ப விடாமை அஃதாது, 'தப்பாது ஒறுப்பவர்' என்பதாம். 'கச்சியின் கண் அணைகின்றது' என்க. விரையின - விரைவாகப் பறப்பன. கை வருதல் - எப்பக்கத்திலும் வருதல். 'புள்ளினம் வானத்திலும் சங்கு கடலினும் ஆர்ப்ப' என்க. அதிர்வு கேட்டு இவை ஆர்க்கின்றனவாம். புள் - நீர்ப் பறவை. தாமங்கள் இனம் - தேரிலும், குதிரைகளிடத்திலும் உள்ள மணி ஒழுங்கின் இனம். 989. குறிப்புரை: "நெஞ்சே" என்பதை முதலிற் கொள்க. திருஏகம்பர்க்கு நாளும் விடாது அடிமை நின்று செய்வார் அவர்பால் நின்று நீள்நெறிகாட்டுவர். எத்தனையும் (மிகச் சிறிதாயினும் பணி) இன்று செய்வோம் (இன்றே செய்வோம். இதனில் நீங்கி, - பணி நாளை நன்று செய்வோம் (மிகுதியாகச் செய்வோம்) - என்று உள்ளி (நினைத்து) உடலில் (உடல் வளர்க்கும் செயலிலே) சென்று, ஒரு நாளும், ஒன்றும் செயாரைத் துணை விடு' என இயைத்து முடிக்க. (பணி சிறிதளவாயினும் அப்பொழுதே செய்தல் வேண்டும். 'நாளை மிகுதியாகச் செய்வோம்' என்று விடுதல் கூடாது. என்பதாம்!
|