பக்கம் எண் :

731திருவொற்றியூர் ஒருபா ஒருபஃது

998.அளவினில் இறந்த பெருமையை ஆயினும்
எனதுளம் அகலா தொடுங்கிநின் றனையே
மெய்யினை இறந்த மெய்யினை ஆயினும்
வையகம் முழுதும்நின் வடிவெனப் படுமே
5கைவலத் திலைநீ எனினும் காதல்

அடையாளங்கள். ஆயினும் சில மயக்க நூல்களால் மயங்குவோர் அவற்றின் உண்மையை உணராது தோற்ற மாத்திரத்தையே கண்டு அவரை இகழ்ந்தே போவர் - என்பதைக் காரைக்காலம்மையார்,

இவரைப் பொருள்உணர மாட்டாதா ரெல்லாம்
இவரை இகழ்வதே கண்டீர்1

என்று அருளிச் செய்தார்.

காணிலும் உருப்பொலார்; செவிக்கினாத காட்சியார்2

என்பது முதலியவைகளில் அவ்வாறான இகழுரைகளைக் காணலாம்.

அறக்கடவுளே ஆனேற்றுருவாய் வந்து சிவபெருமானைச் சுமந்த வரலாற்றைக் கந்த புராணத்துத் தட்ச காண்டத்துத் ததீசி உத்தரப் படலத்துட் காண்க. மூத்தீக்கள் வட்டம், வில், முக்கோணம் ஆகிய இம்மூவகை வடிவில் அமைக்கப்படும் குண்டங்களில் வளர்க்கப்படும் வேள்வித் தீக்கள். அவை முறையே சூரியன், சந்திரன், அக்கினி வடிவங்களைக் குறிக்கும். சதுரமும் வட்டத்தில் அடங்குவதாகும். வேதமான் - வேதம் போலும் மான். வேதம் போலுதல், நான்கு கால்களை உடைமையும், ஒலித்தலும். 'பூத நாதன்' என்பது வெளிப்படைப் பொருளில் "பூத கணங்கட்குத் தலைவன்" எனப் பொருள்தரினும் உள்ளுறைப் பொருளில் 'உயிர்கட்குத் தலைவன்' (பசுபதி) எனப் பொருள் தரும். "தெருட்டுமாற்றானே" என உருபு விரிக்க. "தற்கொலி" என்பது சாதிப் பெயராய் நின்றது. "சொல்வன்மை, பொருள் வன்மை" எனத் தனித் தனிக் கூட்டுக. பொருள் வன்மையாவது வெளிப்படைப் பொருள் இகழ்ச்சியா அமைதல்.

998. குறிப்புரை: "ஓங்கு கடல் உடுத்த ஒற்றி யூர" என்பதை முதலிற் கொள்க. அளவு - அளவை வகைகள். அவை யனைத்தையும் கடந்த பெருமை - பரப்பு. 'யாதோர் அளவைக்கம் உட்படாத நீ என்னுடைய சிறிய உள்ளத்தினுள் ஒடுங்கி நிற்கின்றாய். "இறைவரோ தொண்டர் உள்ளத்து ஒடுக்கம்"3 என ஒளவையாரும் கூறினார். மெய்


1. அற்புதத் திருவந்தாதி - 29
2. திவ்வியப் பிரபந்தம் - திருச்சந்த விருத்தம் - 69.
3. தனிப்பாடல்.