பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை732

செய்வோர் வேண்டும் சிறப்பொழி யாயே
சொல்லிய வகையால் துணையலை ஆயினும்
நல்லுயிர்க் கூட்ட நாயகன் நீயே
எங்கும் உள்ளோய் எனினும் வஞ்சனை
10தங்கிய அவரைச் சாராய் நீயே,

அஃதான்று
பிறவாப் பிறவியை, பெருகாப் பெருமையை
துறவாத் துறவியை தொடராத் தொடர்ச்சியை
நுகரா நுகர்ச்சியை நுணுகா நுணுக்கினை

15அகலா அகற்சியை அணுகா அணிமையை

செய்யாச் செய்கையை சிறவாச் சிறப்பினை
வெய்யை தணியை விழுமியை நொய்யை
செய்யை பசியை வெளியை கரியை
ஆக்குதி அழித்தி ஆன பல்பொருள்

20நீக்குதி தொகுத்தி நீங்குதி அடைதி

ஏனைய வாகிய எண்ணில் பல்குணம்
நினைதொறும் மயக்கும் நீர்மைய ஆதலின்
ஓங்குகடல் உடுத்த ஒற்றி யூர
ஈங்கிது மொழிவார் யாஅர் தாஅம்

25சொல்நிலை சுருங்கின் அல்லது

நின்னியல் அறிவோர் யார்இரு நிலத்தே.

7


- உயிர்கள் பெறுகின்ற பலவகையான உடம்புகள். அத்தகைய உடம்பு எதுவும் உனக்கு இல்லையாயினும் உலகம் முழுதும் உனக்கு உடம்பாகச் சொல்லப்படுகின்றது. ("விசுவ ரூபி" என்பது வேத மொழி) "கைவலம்" என்பதில் வலம், ஏழனுருபு. நீ ஒருவர் கைக்கும் உட்படாதவனாயினும், காதல் செய்வோர் (அன்பர்கள்) செய்யும் சிறப்பு - பூசையும், விழாவும் போல்வனவற்றில் நீங்காது நிற்கின்றாய். முற்படக் கூறிய வகைகளால் நீ ஒருவர் பக்கத்திலும் உள்ளாயில்லையாயினும் உயிர்த் தொகுதிக்கு நீயே தலைவனாகின்றாய். நீ இவ்விடத்திலும் ஒழிவின்றி நிற்பவ னாயினும் வஞ்சனையாளரை அணுகாதவனாகின்றாய். இவ்வாறன்றியும் பிறவாமலே பிறந்த பிறவியை உடையாய்; (இயற்கைப் பொருள், அனாதிப் பொருள்' என்பதாம். படிமுறையால் பெருகாத (வளராத - இயல்பிலே) விரிந்து நிற்கின்ற விரிவை உடையாய்; துறவாமலே துறந்த துறவை உடையாய்; ('முன்னே பற்றுக் கொண்டிருந்து, பின்பு அப்பற்றைத் துறவாமல் இயல்பாகவே பற்றற்றவனாய் இருக்கின்றாய்'