999. | நிலத்திடைப் பொறையாய் அவாவினில் நீண்டு சொலத்தகு பெருமைத் தூரா ஆக்கை மெய்வளி ஐயொடு பித்தொன் றாகி ஐவகை நெடுங்காற் றாங்குடன் அடிப்ப | 5 | நரையெனும் நுரையே நாடொறும் வெளுப்பத் திரையுடைத் தோலே செழுந்திரை யாகக் கூடிய குருதி நீரினுள் நிறைந்து மூடிய இருமல் ஓசையின் முழங்கிச் சுடுபசி வெகுளிச் சுறவினம் எறியக் | 10 | குடரெனும் அரவக் கூட்டம்வந் தொலிப்ப ஊன்தடி எலும்பின் உள்திடல் அடைந்து தோன்றிய பல்பிணிப் பின்னகம் சுழலக் கால்கையின் நரம்பே கண்ட மாக மேதகு நிணமே மெய்ச்சா லாக | 15 | முழக்குடைத் துளையே முகங்க ளாக |
என்றார். சொல்நிலை - 'அது இன்னது' எனத் தம்மின் வேறாய்ச் சுட்டியுணர்ந்து சொல்லும் நிலை. அது நீங்குதலாவது, தான் அதனின் வேறாய் நில்லாது அதுவேயாய் ஒட்டேயுணரும் நிலை. அந்நிலை உணர்வார் உணர்வதாய் நிற்பதல்லது, வேறாய்ப் பிறர்க்கு உணர்த்த வருவதன்று. அதனையே, இங்ங னிருந்ததென் றெவ்வண்ணம் சொல்லுகேன் அங்ங னிருந்ததென் றுந்தீபற அறியும் அறிவதன் றுந்தீபற எனத் திருவுந்தியார் கூறிற்று. "எவ்வண்ணம் சொல்லுவேன்" என்றதனால் அட்டியுணர்த்தப் படாமை கூறினாராயினும் "அங்ஙன் இருந்தது" என்றமையால் அஃது அனுபவப் பொருளாயினமை கூறினாராதலின், 'மெய்ப்பொருள் அநிர்வசனீயம்' என்றல் பொருந்தாதாம். விழுப்பம், இங்குத் திட்பத்தைக் குறித்தது. 999. குறிப்புரை: ஈற்றடியை முதலிற் கொள்க. இப் பாட்டினுள் உடம்பு கடலாகவும், இறைவன் திருவடி அக்கடலைக் கடப்பிக்கும் மரக்கலமாகவும், இறைவன் திருவருளைப் பெற்றோரே அம்மரக்கலத்தைப் பற்றிக் கடலைக் கடக்கும் பயணிகளாகவும் உருவகம் செய்யப்படுதல் அறியத் தக்கது. 'பாதத்தில் சிந்தையை நிறுத்தி' என்க. பொறை - சுமை. 'உடம்பை பூமியோடு பொருத்திக் காணின் உடம்பு பூமிக்குச் சுமையாகும்' எனவும், 'ஆசையோடு
|