| வழுக்குடை மூக்கா றோதம்வந் தொலிப்ப இப்பரி சியற்றிய உடலிருங் கடலுள் துப்புர வென்னும் கழித்தலைப் பட்டிங் காவா என்றுநின் அருளினைப் பெற்றவர் | 20 | நாவா யாகிய நாதநின் பாதம் முந்திச் சென்று முறைமையின் வணங்கிச் சிந்தைக் கூம்பினைச் செவ்விதின் நிறுத்தி உருகிய ஆர்வப் பாய்விரித் தார்த்துப் பெருகிய நிறையெனுங் கயிற்றிடைப் பிணித்துத் | 25 | துன்னிய சுற்றத் தொடர்க்கயி றறுத்து மன்னிய ஒருமைப் பொறியினை முறுக்கிக் காமப் பாரெனுங் கடுவெளி அகற்றத் தூமச் சோதிச் சுடருற நிறுத்திச் சுருங்கா உணர்ச்சித் துடுப்பினைத் துழாவி | 30 | நெருங்கா அளவில் நீள்கரை ஏற்ற ஆங்கவ் யாத்திரை போக்குதி போலும் ஓங்குகடல் உடுத்த ஒற்றியூ ரோயே. | | 8 |
பொருத்திப் பார்க்கின், எல்லையின்றி நீள்வதாகும். (ஆசைக்கு அளவில்லை என்பதாம்.) சிறுமையைப் 'பெருமை' என்றது இகழ்ச்சிக் குறிப்பு. "ஆக்கை" என்னும் ஐகார ஈற்றுத் தொழிற்பெயர் ஆகுபெயராய் ஆக்கப்பட்ட குழியைக் குறித்தது. குழி - பள்ளம்; ஆழம் என்றது வயிற்றை. 'பொறையாய், நீண்டு, தூர்க்கப் படாத ஆழத்தையுடைய இருங்கடல்' என்க. வளி - வாதம். ஐ - சிலேத்துமம். வாதம் முதலிய மூன்று முதல் நிலைப் பொருள்களில் தலையாயது வாதமேயாதலின் அதனை, "மெய் வளி" என்றார். "ஓடு" என்பதை வளி, பித்து இவற்றிற்கும் கூட்டுக. 'வளி முதலிய மூன்றனோடுங் கூடி, ஐவகைக் காற்று அடிப்ப' என்க. தச வாயுக்களில், பிராணன், அபானன், உதானன், சமானன், வியானன் என்னும் ஐந்தே சிறப்புடைமை பற்றி "ஐவகைக் காற்று அடிப்ப" என்றார். கடலில் பல திசையான காற்றுக்கள் அடித்தல் இயல்பு. வெளுப்ப - வெளிதாய்த் தோன்ற. மெலிந்து தொங்கும் தோல், 'திரை' எனப்படும். கடல் அலைகளுக்கும், 'திரை' என்பது பெயர். மூடிய இருமல் - பேசுதலைத் தடுக்கும் இருமல். 'பசியும், வெகுளியுமாகிய சுறவினம்' என்க. அரவம் - பாம்பு; கடல் வாழ் பாம்பு. ஒலிப்ப - இரைய. ஊன் - இறைச்சி. தடி - திசை. திடல் - கடல்களில் சிறு தீவுகள்.
|